கூட்டு எண் 6 நியூமெராலஜி பலன்கள் – Numerology Number 6 in Tamil – பிறப்பு எண் 6, 15, 24 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 6ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
அதிபதி: சுக்கிரன்
அதிர்ஷ்ட தேதிகள் – 6,15,24,9,18,27
அதிர்ஷ்ட நிறம் – வெண்மை நிறம், வெளிர்மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட ரத்தினம் – வைரம்
தெரிந்து கொள்க: எண் கணிதம் ஜோதிடம் பார்ப்பது எப்படி?
நியூமெராலஜி எண் 6ல் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள்
எண் 6ல் பிறந்தவர்களுக்கு கலை ஆர்வம் அதிகமாக இருக்கும். இயல்பாகவே அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். அழகிய கண்களை கொண்டிருப்பார்கள். கவிதை, நடனம், சங்கீதத்தில் ஈடுபாடு இருக்கும். எப்பொழுதும் சந்தோசமாக வாழவே நினைப்பார்கள். சோகக்கதைகள் பேசுவது பிடிக்காது.
ஆடம்பர வாழ்க்கை மற்றும் சுக போகங்களை அதிகமாக விரும்புவார்கள். அதேநேரம், ஆனிமிக நாட்டமும் கொண்டிருப்பார்கள். எந்த விஷயத்தையும் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டார்கள். பலமுறை சிந்தித்த பின்பே முடிவு எடுப்பார்கள். ஓவியம் வரைதல், இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
தன்னை அலங்காரப்படுத்தி கொள்வார்கள். எப்பொழுதும் சிரித்த முகமுடையவர்கள். தாராள மனப்பான்மையும் உள்ளவர்கள். மற்றவர்களிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்கள். இயல்பு வாழக்கையில் எந்த குறையும் இருக்காது. படிப்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
மனைவி, தாய் மூலம் அதிக லாபம் கொண்டவர்கள். சமாதான விரும்பி, விருந்து, கேளிக்கை, சினிமா இவற்றில் விருப்பம் இருக்கும்.
6ஆம் தேதி பிறந்தவர்கள்
6ஆம் தேதியில் பிறந்தவர்கள் கண்ணியமானவர்கள். எப்போதும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் காணப்படுவார்கள். பேசும்போது ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அனைத்து விதமான கலைகளையும் எளிதாக கற்றுக்கொள்வார்கள். பணம் மற்றும் பொருள் சேர்ப்பதில் ஆர்வம் உண்டு. யாரை பிடித்தால் வேலை நடக்கும் என்று தெரிந்து காரியம் சாதித்து கொள்வார்கள்.
15ஆம் தேதி பிறந்தவர்கள்
15ஆம் தேதியில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். மிகச்சிறந்த பேச்சாளர்கள். யாரையும் நகைச்சுவையாக பேசியே வசியம் செய்வார்கள். கலைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பழகிய சிறுது நேரத்திலேயே மற்றவர்களை புரிந்துகொள்வதில் வல்லமை பொருந்தியவர்கள். சிலர் சதா பேசிய வண்ணம் இருப்பார்கள்.
24ஆம் தேதி பிறந்தவர்கள்
24ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் பணிவானவர்கள். வேலை செய்யும் இடத்தில மேல் அதிகாரிகளின் ஆதரவு எப்பொழுதும் உண்டு. ஆடம்பர பிரியர்கள். சிலருக்கு சிறு வயதிலேயே கல்வி தடை உண்டாகும், மற்றவர்களின் உதவியால் கல்விபயில இயலும். சுய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான மனைவியும் வாழ்க்கையும் அமையும்.
நியூமெராலஜி எண் 6ல் பிறந்தவர்கள் தொழில்கள்
6ஆம் தேதியில் பிறந்தவர்கள் விலை உயர்ந்த துணிகள் விற்பனை, பட்டு விற்பனை, உயர்ரக ரத்தினங்கள், ஆடம்பர பொருட்கள், மற்ற விலையுயர்ந்த பொருட்கள், மாளிகை போன்ற வீடுகள் கட்டுதல், அழகு சாதன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, கண்ணாடி, வாசனை திரவியங்கள், சந்தனம், அணிகலன்கள், தெய்வீக சம்பந்தமான நூல்கள் எழுதுதல், போன்றவை மூலம் அதிக லாபம் உண்டாகும்.
எண் 6ஆம் தேதியில் பிறந்தவர்கள் 6,9ஆம் எண் காரர்களை தொழில் கூட்டாளியாக சேர்த்தால் தொழிலில் வெற்றி பெறலாம்.
தெரிந்து கொள்க
- எண் 1 நியூமெராலஜி பலன்கள்
- எண் 2 நியூமெராலஜி பலன்கள்
- எண் 3 நியூமெராலஜி பலன்கள்
- எண் 4 நியூமெராலஜி பலன்கள்
- எண் 5 நியூமெராலஜி பலன்கள்
- எண் 7 நியூமெராலஜி பலன்கள்
- எண் 8 நியூமெராலஜி பலன்கள்
- எண் 9 நியூமெராலஜி பலன்கள்
- எண் கணிதம் ஜோதிடம் பார்ப்பது எப்படி?
- திருமண பொருத்தம்
- திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Star Matching Table for Marriage in Tamil
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்