Skip to content
Home » நியூமெராலஜி » எண் 4 நியூமெராலஜி பலன்கள்

எண் 4 நியூமெராலஜி பலன்கள்

எண் 4 நியூமெராலஜி பலன்கள் (Numerology Number 4 in Tamil) – பிறப்பு எண் 4, 13, 22, 31 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 4ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

எண் 4 நியூமெராலஜி பலன்கள்
எண் 4 நியூமெராலஜி பலன்கள்

அதிபதி: ராகு
அதிர்ஷ்ட தேதிகள்
– 4,13,22,31,1,10,19,28
அதிர்ஷ்ட நிறம் – நீல நிறம்
அதிர்ஷ்ட ரத்தினம் – கோமேதகம்

தெரிந்து கொள்க:  எண் கணிதம் ஜோதிடம் பார்ப்பது எப்படி?

நியூமெராலஜி எண் 4ல் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள்

எண் 4ல் பிறந்தவர்களுக்கு பேச்சு தன்மை அதிகம். உணவு பிரியர். நடுத்தர உயரம், சட்டென்று தனது வெளிப்பாட்டை தெரிவிப்பார்கள். தன்னை சார்ந்தவர்களை திருத்தி உயர்த்தவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். தன்மையாக பேசும் குணம் இருந்தாலும் பிடிக்காத தலைப்பு அல்லது பிடிக்கத்தவரிடம் பேசும்பொழுது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர் குறைகளை கூறுவார்கள்.

எந்த விஷயத்தை பேசினாலும் அதற்கு எதிர்மறையான விஷயங்களையே பேசுவார்கள். எதிர்வாதம் செய்யக்கூடியவர்கள். மற்றவர்கள் என்னதான் கருத்து கூறினாலும் அதனை தலைக்கேற்றி கொள்ளமாட்டார்கள்.

இவர்களுக்கென்று தனிப்பட்ட பாணியில் சிந்திப்பார்கள். இளகிய மனம் கொண்டவர்கள். எந்த செயலிலும் விஷயத்திலும் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு முடிவு எடுப்பார்கள்.

கதைகள், வேதாந்தம், சித்தாந்தம், சாஸ்திரங்கள், வரலாறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதேபோல எல்லாம் எனக்கு தெரியும் என்கிற எண்ணம் இவர்களுக்கு உண்டு. புகழ் மீது பற்று இருக்காது. கஷ்டப்பட்டால் வெற்றி உறுதி என்பதனை உணர்ந்தவர்கள் அதனாலே, அதிக உழைப்பை இட்டு பணம் சம்பாதிப்பார்கள்.

4ஆம் தேதியில் பிறந்தவர்கள்

4ஆம் தேதியில் பிறந்தவர்கள் துணிச்சல் நிறைந்தவர்கள், கண்டிப்பு உடையவர்கள். தனது விருப்பதையோ அல்லது தேவையையோ நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திக்கொள்வர். போகங்கள் அனுபவிப்பதில் அதிக நாட்டம் இருக்கும். இனிமையாக பேசுபவர்கள்.

13ஆம் தேதியில் பிறந்தவர்கள்

13ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும். சிறுவயதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமக்க நேரிடும். அதனால் சில நேரங்களில் நேர்மையாக நடக்க முடியாது. எதிரிகளால் அவ்வப்போது இடைஞ்சல்கள் உண்டாகும். காரணமில்லாமல் பலரது எதிர்ப்பையும் விரோதத்தையும் தேடிக்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள்.

22ஆம் தேதியில் பிறந்தவர்கள்

22ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகுந்த சாமர்த்தியசாலி, நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள், எதிரிகளுக்கு மத்தியில் கூட தொழில் செய்து முன்னேறுவர். இருப்பினும் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே இவர்களை அதிகம் கவரும். விதியும் தீய வழியில் செல்ல பல சந்தர்ப்பங்களை உருவாக்கும் அதுபோன்ற நேரங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. பல ஜன தொடர்பு உண்டு.

31ஆம் தேதியில் பிறந்தவர்கள்

31ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலி, சூட்சம அறிவு கொண்டவர்கள். புதிதாக பழகுபவர்களை கூட எளிதாக புரிந்துகொள்வார்கள். மற்றவர்கள் போல் இல்லாமல் லாப நஷ்டங்களை பொருட்படுத்தாமல் தன் விருப்பப்படி நடப்பார்கள். எதிரிகளை எளிதாக கையாளுவார்கள். அதிக போக எண்ணங்களை கொண்டவர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய தேதிகள்
8,17,16,7,16,25ஆம் தேதிகள்

மற்ற நாட்கள் மத்திம பலன் உள்ளவை

நியூமெராலஜி எண் 4ல் பிறந்தவர்கள் தொழில்கள்

பிரசங்கம் பார்ப்பது, கட்டுரை எழுதுவது, வாழ்வியல் முறை சம்பந்தமான கலைகளை கற்றுத்தருவது. தத்துவ ஆராய்ச்சி, சர்க்கஸ், ஜோதிடம், வைத்தியம், நாட்டியம் தொடர்புடைய தொழில்கள், சினிமாத்துறை, வாசக சாலை நடத்துதல், மேஜை, நாற்காலி வியாபாரம், புகைப்பட தொழில், X-ray, போட்டி பந்தயங்கள் நடத்துதல் போன்ற தொழில்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இருப்பினும் கடின உழைப்பை செலவு செய்த பணம் சம்பாதிக்க முடியும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்