எண் 1 நியூமெராலஜி பலன்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

எண் 1 நியூமெராலஜி பலன்கள் – Numerology Number 1 in Tamil பிறப்பு எண் 1, 10, 19, 28 ஆக உள்ளவர்கள் மற்றும் கூட்டு எண், விதி எண் 1 ல் பிறந்தவர்களுக்கு பொது பலன்கள், அதிர்ஷ்ட தேதிகள், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட ரத்தினம், தொழில் போன்றவைகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

எண் 1 நியூமெராலஜி பலன்கள்
எண் 1 நியூமெராலஜி பலன்கள்

அதிபதி: சூரியன்
அதிர்ஷ்ட தேதிகள்
– 1,10,19,28,4,13,22,31
அதிர்ஷ்ட நிறம் – சிகப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட ரத்தினம் – மாணிக்கம் மற்றும் மஞ்சள் புஷ்பராகம்

நியூமெராலஜி எண் 1ல் பிறந்தவர்கள் பொதுவான பலன்கள்

எண் 1ல் பிறந்தவர்கள் எப்பொழுதும் உஷ்ணமான சரீரத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் யாருக்கும் வளைந்து கொடுத்து போக மாட்டார்கள். பயமுறுத்தலுக்கு அஞ்சாதவர்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர்கள்.

இவர்களுக்கு நிர்வாகத்திறன் அதிகம் என்பதால் வேலை செய்யும் இடத்தில உயர் பதவி, அரசாங்க வேலைகள், அரசாங்க அனுகூலம் கிடைக்கும். அனைவரையும் நம்ப மாட்டார்கள். சிலரையே நண்பர்களாக கொண்டிருப்பார்கள். நாரிகமாக நடந்து கொள்ள விரும்புவார்கள்.

இவர்கள் புகழுக்கு அடிமையானவர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். நடுத்தர உயரமும் கம்பீரமான உடல் அமைப்பும் கொண்டவர்கள். அரசியலில் ஆர்வம் இருக்கும். சாஸ்திரத்தில் ஈடுபாடு உண்டு. இவர்களுடைய ஜாதகத்தில் சூரியன் வலிமையுடன் இருப்பது மிகவும் நல்லது.

1ஆம் தேதி பிறந்தவர்கள்

தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனைகளை கேட்க விருப்பம் இருக்காது. கனமான குரலில் பேசுவார்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்துவார்கள். யாருடைய பேச்சையும் கேட்காமல் தன இஷ்டப்படி நடப்பார்கள்.

10ஆம் தேதி பிறந்தவர்கள்

பழகுவதற்கு இனிமையானவர். எப்பொழுதும் பொறுமையுடன் நடந்துகொள்வார்கள். மனதில் உள்ளதை வெளிப்படுத்த சற்று தயக்கத்துடன் வெளிப்படுத்துவார்கள். பாசம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் யாரையும் விரோதிக்க மாட்டார்கள். இவர்களிடம் அன்பு காட்டினாள் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.

19ஆம் தேதி பிறந்தவர்கள்

தன் கொள்கையில் இருந்து மாறாதவர்கள். மிகுந்த மனோசக்தி உடையவர்கள். எதை கற்றுக்கொண்டாலும் அதில் புலமையுடன் திகழ்வார்கள். இவர்களுடைய பேச்சு மற்றும் செய்கையை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாது, நெடுநாள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்.

28ஆம் தேதி பிறந்தவர்கள்

அழகான தோற்றம் உடையவர்கள். எப்போதும் கலகலப்பானவர்கள். யாரையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அதனால் ஏமாற்றம் அடையக்கூடும். எவருடைய மனதையும் புண்படுத்த விரும்ப மாட்டார்கள். கபடு சூது தெரியாத மனிதராக இருப்பார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய தேதிகள்

8,17,26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் இல்லாத தேதிகள்

மற்ற நாட்கள் மத்திம பலன் உள்ளவை

நியூமெராலஜி எண் 1ல் பிறந்தவர்கள் தொழில்கள்

இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதால் நேர்மையான தொழில்கள் அனைத்தும் இவர்கள் செய்யலாம். வைத்திய தொழில், கவிதை எழுதுவது, புதினங்கள் எழுத்து துறை, சங்கீதம், ஜோதிடம், IAS, IPS தொழிலுக்கு முயற்சி செய்யலாம். 1,3,4,5 எண் கொண்டவர்களை கூட்டாக சேர்த்து கொள்ளலாம்.

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்