Numerology Prediction in Tamil – இந்த பதிவில் எண் கணித ஜோதிடம் பார்ப்பது எப்படி? மற்றும் எண் கணிதம் முறையில் பெயர் வைக்க எவ்வாறு எண்களை தேர்ந்துடுப்பது என்று தெரிந்து கொள்வோம். மேலும் விதி எண், பெயர் எண், கூட்டு எண் மற்றும் நட்பு எண் என்றால் என்ன? என்று அவற்றை பயன்படுத்தும் முறையும் அறிந்துகொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
மனித வாழ்க்கையில் எண்களும் எழுத்துக்களும் எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன என்பதை “எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்” என்கிற பழமொழி உணர்த்துகிறது.
எண் கணிதம் வைத்து வாழ்க்கைக்கு தேவையான பிரதானமான பலன்களை ஜோதிட சாஸ்திரம் போல கூற முடியாது என்றாலும் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.
எண் கணித ஜோதிடத்தில் விதி எண் மற்றும் பெயர் எண் என உண்டு. விதி என்னைக்கொண்டு பெயர் என்னை தேர்வு செய்தல் நல்லது.
நாம் பிறந்த தேதியினை கொண்டு விதி எண் கணக்கிட வேண்டும். அதேபோல எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் என்பதை விதி எண் பொறுத்து எந்த எண்கள் நட்பு மற்றும் பகை என்றும் அவற்றை கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை விரிவாக பார்ப்போம்.
எண் கணித ஜோதிடத்தில் எழுத்துக்கான எண்களை நிர்ணயிக்கும்பொழுது ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். எனவே ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்
A, I, J, Q, Y – 1
B, K, R – 2
C, G, L, S – 3
D, M, T – 4
E, H, N, X – 5
U, V, W – 6
O, Z – 7
F,P – 8
மேற்கூறிய அட்டவணைப்படி எண் 8 வரை ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இருக்கும். எண் 9ன் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
எண்களும் கிரகங்களும்
சூரியன் – எண் 1
சந்திரன் – எண் 2
குரு – எண் 3
ராகு – எண் 4
புதன் – எண் 5
சுக்கிரன் – எண் 6
கேது – எண் 7
சனி – எண் 8
செவ்வாய் – எண் 9
மேற்கூறிய அட்டவணையில் ஒவ்வொரு எண்ணிற்கும் அதனுடைய ஆதிக்க கிரகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
விதி எண் கணக்கிடுவது எப்படி?
ஒரு ஜாதகரின் பிறந்த ஆங்கில தேதியில் வரும், தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே அந்த ஜாதகரின் விதி எண் ஆகும்.
உதாரணமாக. 30.01.1985 என்ற தேதியில் ஒருவர் பிறந்திருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள் 3+0+0+1+1+9+8+5 = 27 என வரும் 2+7=9 எனவே இந்த ஜாதகரின் விதி எண் 9 ஆகும். அடுத்து பெயர் எண் என்றால் என்ன என்று பார்ப்போம்.
பெயர் எண் கணக்கிடுவது
ஒரு ஜாதகரின் பெயரை கொண்டு கணக்கிடுவதே பெயர் எண் ஆகும். ஜாதகரின் பெயர் Y SANTHOSH என வைத்துக்கொள்வோம். மேற்கூறிய அட்டவணையில் எழுத்துக்கான எங்களை கொண்டு பெயர் எண் கணக்கிட வேண்டும்.
Y. SANTHOSH
1+3+1+5+4+5+7+3+5=34; 3+4=7
எனவே இந்த ஜாதகருடைய பெயர் எண் 7 ஆகும். பெயருக்கான எண்ணை கணக்கிடும்பொழுது வழக்கமாக பெயரை எப்படி எழுதுகிறோமோ அப்படிதான் எழுத வேண்டும். பெயருக்கு முன்னாள் மிஸ்டர், மிஸ், திருமதி, திரு, ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் பெயர்க்கு பின்னால் வரும் பட்டங்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு ஒருவருடைய விதி எண் கொண்டு அதே எண் மற்றும் அதற்கு நட்பு எண் வரும்படி பெயரை அமைக்க ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பின்வரும் அட்டவணையில் எண்ணிற்கு வரும் நட்பு எண்ணை காண்போம்.
எண் 1 – நட்பு எண் 4
எண் 2 – நட்பு எண் 7
எண் 3 – நட்பு எண் 9
எண் 4 – நட்பு எண் 1
எண் 5 – நட்பு எண் 6
எண் 6 – நட்பு எண் 9
எண் 7 – நட்பு எண் 2
எண் 8 – நட்பு எண் 5
எண் 9 – நட்பு எண் 6
குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யும்பொழுது குழந்தையின் விதி எண் கணக்கிட்டு பின்பு அதே எண் அல்லது அதனுடைய நட்பு எண் வரும்படி பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தெரிந்துகொள்க:
- எண் 1 நியூமெராலஜி பலன்கள்
- எண் 2 நியூமெராலஜி பலன்கள்
- எண் 3 நியூமெராலஜி பலன்கள்
- எண் 4 நியூமெராலஜி பலன்கள்
- எண் 5 நியூமெராலஜி பலன்கள்
- எண் 6 நியூமெராலஜி பலன்கள்
- எண் 7 நியூமெராலஜி பலன்கள்
- எண் 8 நியூமெராலஜி பலன்கள்
- எண் 9 நியூமெராலஜி பலன்கள்
- திருமண பொருத்தம்
- திருமாங்கல்யம் செய்ய உகந்த நாள்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Star Matching Table for Marriage in Tamil
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்