Skip to content
Home » Vasthu in Tamil » உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்(Vastu for Hotel): உணவகம்(ஹோட்டல்) அமைக்க என்னென்ன வாஸ்து குறிப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம் மேலும் அதற்கேற்றவாறு அமைத்து கொள்வதால் வாழ்வில் முன்னேற்றத்தை காண்போம்.

உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து
உணவகம் ஹோட்டல் அமைக்க வாஸ்து

உணவகம் வடகிழக்கு திசையில் நீண்டு இருக்குமாறு அமைக்க வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும், பணம் சேரும், அந்த சுற்று வட்டாரத்தில் கடைபிரபலம் ஆகும். புகழ் ஓங்கும்.

தெற்கு திசையை விட வடக்கு திசையில் கொஞ்சம் வெற்றிடம் விட வேண்டும். வெற்றிடம் விட்ட வடக்கு திசையில் புல்வெளி, அழகுக்காக பயன்படுத்தும் செடிகள் ஆகியவற்றை வைத்துக்கொள்ளலாம்.

வடமேற்கு திசையில் வாகனங்களை நிறுத்தம் இடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

வடமேற்கு திசையில் வாகன நிறுத்த இடத்தை அமைத்துக்கொள்ள முடியாதவர்கள் தென்கிழக்கு திசையில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை அமைத்துக்கொள்ளலாம்.

கீழ் நில தளத்தில்(Ground Floor) பணியாளருக்கு ஓய்வறை, சரக்கு சேமிப்பு அறை(Store Room), மின்சாரம் சம்பந்தப்பட்ட அறை ஆகியவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

தெரிந்து கொள்க; ஸ்டார் ரூம் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

உணவகத்தில் தென்மேற்கு திசையில் பணம் வாங்குவதற்கான இடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

பணம் வாங்குபவர் கிழக்கு திசையையோ அல்லது வடக்கு திசையையோ நோக்கியவாறு உட்க்கார்ந்திருக்க வேண்டும். அதற்கேற்றவாறு மேஜையை அமைத்துக்கொள்க.

தென்கிழக்கு பகுதியில் சமையலறையை அமைத்துக்கொள்ள வேண்டும், அதேபோல கொதி கலன்கள், புகை வெளியேற்றும் எந்திரம், கருவிகளை தென்கிழக்கு திசையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

தெரிந்து கொள்க: சமையலறை அமைக்க வாஸ்து குறிப்புகள்

கிழக்கு திசை அல்லது வடகிழக்கு திசையில் கை கழுவும் இடத்தை அமைக்க வேண்டும்.

நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Keywords; vastu shastra for hotel | vastu for resort | vastu for hotel restaurant | hotel vastu | ஹோட்டல் வாஸ்து

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்