உடலுக்கு அதிக புரதம் தேவையா?
உடல் எடை குறைப்பது(Weight Loss Diet Plan in Tamil) – புரதம் உடலுக்கு தேவை இருப்பினும் அதிக புரதம் அவசியமற்றது. ஏனெனில் புரதம் உடலில் சேமித்து வைக்க படுவதில்லை. அதிகமான புரதங்கள் உடலில் இரசாயன மாற்றங்களை அடைந்து கழிவு பொருட்களாக வெளியேறுகின்றன. எனவே புரதம் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள அவசியமில்லை. பெரும்பாலும் புரதங்கள் அசைவ உணவில் மட்டும் இருப்பதில்லை. பயறு பருப்பு சோயா கடலை மற்றும் சிறு தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
உடல் எடை குறைப்பது – புரதத்தின் பங்கு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் அசைவ உணவை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்குவார்கள், ஏனெனில் அதில் புரத்துடன் கொழுப்பும் கலந்திருக்கும். இதில் மிருக இன இறைச்சியில் உள்ள கொழுப்பை விட பறவை இன இறைச்சியில் கொழுப்பு குறைவு. இவ்வாறு பறவை இன இறைச்சியை உண்ணும்பொழுதும் தோல் பகுதியை நீக்கிவிட்டு இறைச்சி பகுதியை உண்ண வேண்டும். தோலில் கொழுப்பு அதிகம் உள்ளது.
இதே போன்று புரத தேவையை குறைத்தாலும் உடலில் மாவுப்பொருட்களின் சதவிகிதம் அதிகமாகி சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது. ஆதலால் போதுமான அளவு புரதம் உடலுக்கு இன்றிமையாதது.
மாமிச புரதங்களின் Leucine என்ற அமினோ அமிலம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பவர்கள் உடலில் உள்ள தசை பகுதிகள் கரைவதை தடுத்து கொழுப்புகளை கரைக்கும். இந்த Leucine மனித உடலில் உற்பத்தியானது மாறாக மற்ற மாமிச விலங்கினங்கள், மாமிச பறவைகள், மீன், முட்டை ஆகியவற்றில் இருந்து கிடைக்கின்றன.
ஆகவே உடல் எடை குறைப்பவர்கள் மாமிச உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:- Planets and Diseases in Astrology | 12 Zodiac Signs
Read More:- Weight Loss Tips in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
Comments are closed.