உடல் எடையும் உடல் நலமும்

உடல் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் உடல் எடையை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சிலர் தீர ஆலோசிக்காமல் தன்னுடைய கண்ணாடியை எடை பார்க்கும் கருவியாக பயன்படுத்துகிறார்கள். சிலர் இரண்டு நாட்கள் கடும் பட்டினி இருந்துகொண்டு சுருங்கிய வயிறை கணக்கில் கொண்டு தன்னுடைய சட்டை மற்றும் பேண்ட் லூசாகிக் கொண்டு வருகிறது என்று எண்ணிக்கொள்வார்கள். இவையிரண்டும் முற்றிலும் தவறான முறையாகும்.

உண்மையில் உங்கள் உடல் இழைப்பதையும் உடல் பருமனாவதையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எடை மெஷினில் பார்த்து குறித்திக்கொள்ள வேண்டும்.

முன்னர் எல்லாம் ஒரு ஆளை பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தால் அவர் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று கருதுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் கொழுத்த உடலுடன் ஒருவர் இருந்தால் அவரும் பல வியாதிகளுக்கு உட்பட்டு இருப்பாரோ! என்ற அச்சம் எழுகிறது.

உயரத்திற்கேற்ற கட்டான உடலே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. மிகவும் அதிகமான உடல் பருமன் நோயின் அறிகுறி என எடுத்துக்கொள்ளலாம். அதே போல ஒல்லியான உடம்பும், உடல் எடை குறைந்து கொண்டே செல்வதும் நோயின் அறிகுறி எனலாம். உயரத்திற்கும் அதிகமான எடையினால் (obesity) இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுடைய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பதே நோய்களுக்கு காரணம். மேலும் எலும்பு மூட்டு நோய்களுக்கும் உடல் பருமனே காரணம் ஆகும்.

உடல் பருமனுடன் தொடர்புடைய நோய்கள்

இருதய நோய்கள்
இரத்த அழுத்தம் மற்றும் அதில் பதிந்துள்ள அதிகப்படியான கொழுப்புகள்
நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்
மனச்சோர்வு மற்றும் உடற்சோர்வு
மலட்டுத்தன்மை மற்றும் எலும்பு சிதைவு
இரைப்பை நோய்கள்

அதிகமான உடல் எடை கொண்டவர்கள் தனது எடையில் 10 சதவீதம் குறைத்தல் கூட அவர்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவர்கள் குறைக்கும் ஒவ்வொரு எடைக்கும் அவர்களுடைய வாழ்நாளில் சில மாதங்கள் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

உங்கள் உடல் வாகை எவ்வாறு கணிக்கலாம்?

இதனை உடல் திணிவுக் குறிப்பீடு (BMI) என்று கணக்கியல் மூலம் அளவிடலாம்.
BMI என்பது கிலோ கிராமினால் உள்ள உங்கள் எடையை மீட்டரினால் ஆன உங்கள் உயரத்தினை வர்க்கப்படுத்தினால் BMI அளவு கிடைத்துவிடும்.

BMI = உடல் எடை(kg) / உயரம்2(m)

இவ்வாறு கணக்கிடும்பொழுது 18.5 முதல் 24.9 க்குள் இருந்தால் அவரது உடல் பருமன் சராசரியானது. BMI 18.5கு குறைவாக இருந்தால் அவர் ஒல்லியானவர். BMI 24.9 க்கு மேலிருந்தால் அவர் பருமனானவர் ஆவார். BMI 30 க்கு மேலிருந்தால் அதிக உடல் பருமன்(Obesity) கொண்டவர் ஆவார்.

bmi index
bmi index

ஒவ்வொருவரும் உடல் பருமனை கணக்கிட்டு நோயற்ற ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

3 Comments

  1. உண்மை ! உண்மை ! நிதர்சனமான உண்மை ! மிக அருமையான செய்தி

    உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மனநலம் நன்றாக இருக்கும் .

    வாழ்க வளமுடன் !

Comments are closed.