இறந்தவர்கள் கனவு பலன்கள் – Irandhavargal Kanavu Palangal in Tamil – இறந்தவர்களை கனவில் கண்டால் நாம் அனைவருக்குமே எழுந்தவுடன் ஒரு பதற்றம் இருக்கும். அதில் நம் தாய் தந்தை, தாத்தா, பாட்டி, உறவினர்கள், நண்பர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் முகம் தெரியாத நபர்கள் இறந்து அவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வீடு தேடி வரும் மற்றும் நீண்ட ஆயுள் என்று பொருள்.
உங்கள் சொந்தத்தில் இறந்தவர்கள் ஒருவர் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் கடுமையான சூழ்நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என அர்த்தம்.
கனவு கண்டவரே இறந்து விட்டது போல் கனவு வந்தால் ஆயுள் கூடும்.
சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று பொருள்.
இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
இறந்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழ் உண்டாகும், செல்வம் சேரும்.
இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால், தீர்க்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறாள் என்று பொருள்.
நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலகும்.
இறந்து போனவர்களை தூக்கி செல்வது போல கனவு கண்டால் நன்மை பயக்கும் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
இறந்தவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் அனைத்து விதமான நன்மையும் ஏற்படும்.
இறந்தவர்கள் கனவு பலன்கள்
இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, எதோ குறை உள்ளது என்று பொருள், கனவில் வந்தவருக்கு திதி கொடுத்தால் நல்லது மற்றும் ஆடி மாதம் அல்லது மாட்டு பொங்கல் அன்றும் அவர்களுக்கு துணி வைத்து படையல் செய்து வழிபடுவது நல்லது.
இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் நற்பெயரும், புகழும் உண்டாகும்.
மனைவி(இளம் வயதில்) இறப்பது போல கனவு கண்டால், இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.
இறந்த மனைவி, மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு வந்தால் நல்லவை. அப்படி இல்லாமல், அவளின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிம்மதியற்றதாகி விடும்.
குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போவதை குறிக்கும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், கனவு கண்டவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள்.
இறந்து போன உங்கள் பாட்டியை நீங்கள் கனவில் காண்பது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வருவதையும் குறிக்கிறது.
பாட்டி அழுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு வேண்டியவரிடம் பிரச்சனைகள் ஏற்படும் என்று பொருள்.
நண்பர்கள் யாராவது இறந்து போனது போல் கனவு கண்டால், நற்செய்தி தேடி வரும்.
- Video – Learn Basic Astrology in Tamil
- ஜோதிடம் தொடர்பான பதிவுகள்
- பறவைகள் கனவு பலன்கள்
- மீன் கனவு பலன்கள்
- வீடு கனவு பலன்கள்
- All Kanavu Palangal in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்