இந்த பதிவில் ஆத்மகாரகன் என்றால் என்ன? என்று பார்ப்போம். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். ஜாதகத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியையும் 30 பாகைகளாக பிரித்து வைத்துள்ளனர். 9 கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில் அமர்ந்திருக்கும். அவ்வாறு அமர்ந்திருக்க எந்த கிரகம் அமர்ந்துள்ள ராசியின் அதிக பாகையில் உள்ளதோ அதுவே ஆத்மகாரகன் ஆகும்.
பொதுவாக ஆத்மகாரக கிரகம்தான் உங்களை வழிநடத்திச் செல்லும் கிரகம் ஆகும். உங்களுடைய எண்ணம் முழுவதும் ஆத்மகாரக கிரகத்தின் காரகத்துவத்திலே இருக்கும். மேலும், இந்த கிரகத்தின் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது அதிக லாபம் மட்டும் பலன்கள் உண்டு.
உதாரணமாக, ஒருவரின் ஆத்மகாரகன் சந்திரன் எனில் அவர் டிபார்ட்மென்ட் ஸ்டோர், மற்றவருக்கு ஆலோசனை கூறுதல், சைக்கோலஜி, நன்றாக ஊரு சுற்றுவது, தாய்ப்பாசம், சிறந்த கற்பனை திறன், கவிதை எழுதுவது போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடுடனும் நல்ல பயனும் உண்டு.
இந்த கிரகம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு இயல்பாகவே எளிதில் கையாளுவதால், அது சார்ந்த விடயங்களில் ஜாதகருக்கு ஒருவித அலட்சியப்போக்கும் ஏற்படும். அதனை தவிர்ப்பது நல்லது.
ஆத்மகாரகன் எப்படி கண்டுபிடிப்பது?
உதாரணமாக சந்திரன் மேஷ ராசியில் 29 பாகையில் அமர்ந்திருக்க அதே ராசியிலோ அல்லது மற்ற ராசியிலோ குரு 28 பாகையில் அமர்ந்திருந்தாலும் சந்திரன் ஜாதகருக்கு ஆத்மகாரகன் ஆவார்.
சரி அவ்வாறு இருக்க ராகு கேதுவும் எதிர் எதிர் 180 பாகையில் சுற்றி வருவன ஆதலால் அதனால இரண்டுமே ஒரே பாகையில் தான் அமரும், இப்பொழுது எப்படி ஆத்மகாரகன் எடுப்பது. இதுபோல அமைந்துள்ள ஜாதகத்தில் ராகு, கேது சாரம் வாங்கிய கிரகத்தை பார்க்க வேண்டும். ராகுவும் கேதுவும் சாரம் வாங்கிய கிரகத்தில் எந்த கிரகம் அதிக பாகையுடன் இருக்கிறதோ அதுவே ஆத்மகாரக கிரகம் ஆகும்.
உதாரணமாக மேஷ ராசியில் ராகு 28 பாகையில் நிற்கிறது எனில் கேதுவும் அதே 28 பாகையில் துலாம் ராசியில் நிற்கும் அப்படி இருக்க ராகு நிற்கும் நட்சத்திர நாதன் கிருத்திகை எனில் அதன் அதிபதி சூரியனின் பாகை அளவு பார்க்க வேண்டும். அது போல கேது துலாமில் விசாகம் நட்சத்திரத்தில் நிற்கிறது எனில் விசாக நட்சத்திரத்தின் அதிபதி குருவின் பாகை அளவு பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு சூரியன் மற்றும் குரு கிரகங்களை எதனுடைய பாகை அதிகமாக இருக்கிறது அதுவே ஆத்மகாரக கிரகம் ஆகும்.(இந்த விதி ராகு கேது ஆத்மகாரகனாக இருக்கும்பொழுது மட்டும்)
தெரிந்துகொள்க
- அஸ்தமனம் என்றால் என்ன?
- வக்கிரம் என்றால் என்ன?
- பரிவர்த்தனை யோகம்
- கிரகயுத்தம் என்றால் என்ன?
- கேந்திரம் ஸ்தானம் என்றால் என்ன?
- திரிகோணம் என்றால் என்ன?
- அடிப்படை ஜோதிடம்
- ஜாதக கட்டம் விளக்கம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்