அம்மா கவிதைகள் – Amma Kavithai in Tamil: மனதை தொடும் என்றும் அம்மா பற்றிய பாசக்கவிதைகள்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
அம்மா கவிதைகள் – Amma Kavithai
மூன்றெழுத்தில் கவிதை
சொல்லச் சொன்னால்
முதலில் சொல்வேன்
அம்மா! என்று.
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை!
அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்
நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முகம்
அம்மா
இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை
ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு
கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது.
அம்மா
எந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்!
Read More – அம்மா பற்றிய பொன்மொழிகள்
அம்மா கவிதைகள் – Amma Tamil Quotes
என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து பிறக்க விரும்பும் கருவறை.
இறைவன் இல்லை என்று சொன்னால் அது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.
தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.
கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தன் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.
எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்.
சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் அம்மா என் அருகிலே.
வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது
யார் சொன்னது என் காதலி தான் என்னை முதலில் காதலித்தது என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என் அன்னை என்னை நேசிக்க தொடங்கி விட்டாள்.
அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு, நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை, தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய அம்மா.
தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கற்பிக்க பட்டு விடுகிறது அம்மா என்னும் மூன்று எழுத்து.
காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.
Read More – அம்மா பற்றிய பொன்மொழிகள்
எதையும் கட்டளையிட்டு செய்ய சொல்பவன் தான் “அப்பா” தன் கருணை மொழியில் உணர்த்தி பாசமுடன் எதையும் செய்ய சொல்பவளே அம்மா.
எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே.
எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள் அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
உன்னை பத்து மாதம் முகம் கூட தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே.
இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்துமே உன் காலுக்கு அடியில் உன் அன்னையின் அன்பை தவிர.
கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.
தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி அம்மா.
- Read More ;- Amma Quotes in Tamil
- Video: அம்மா கவிதைகள்
- பாரதியார் கவிதைகள்
- அக்கா தம்பி கவிதை வரிகள்
- அம்மா நினைவு கவிதை
- பாரதியார் கவிதைகள் சூரியன்
- பாரதியார் கண்ணம்மா கவிதைகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்