கோளறு பதிகம் (மகான் திருஞானசம்பந்தர்)
Kolaru Pathigam Lyrics in Tamil – கோளாறு பதிகம் எழுதியவர் மகன் திருஞானசம்பந்தர் ஆவர். மக்கள் அனைவரும் கோள்களின் தாக்கத்திலிருந்து விடைபெற்று இன்புற்று வாழ இறைவன் சிவனை வேண்டி படைக்கப்பட்டது.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என முதல் பாடல் வரிகள் துவங்கி அனைத்து பாடல்களையும் இயற்றினார்.
கோளாறு பதிகம் வரலாறு (Kolaru Pathigam In Tamil History )
திருஞானசம்பந்தர், மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.
ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அதனால் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.
இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் அதுவே இந்த கோளாறு பதிகம்.
கோளறு பதிகம் முதல் பாடல்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
விளக்கம் (Kolaru Pathigam Meaning)
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். துன்பங்கள் ஏதும் ஏற்படாது.
கோளறு பதிகம் 2ஆம் பாடல்
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
விளக்கம்
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. பதிலாக நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் 3ஆம் பாடல்
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
விளக்கம்
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிந்து குற்றமற்ற செல்வமும் வந்து எய்துவர்.
கோளறு பதிகம் 4ஆம் பாடல்
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிந்து, கொடிய நோய்களிடமிருந்து பாதுகாப்பார்.
கோளறு பதிகம் 5ஆம் பாடல்
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து சேராது.
கோளறு பதிகம் 6ஆம் பாடல்
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு துன்பம் நேராது. மாறாக நன்மையே .நடக்கும்.
கோளறு பதிகம் 7ஆம் பாடல்
செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
வெப்பம், குளிர், வாதம், பித்தம் முதலான நாடிகள் ஆகியவை இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் 8ஆம் பாடல்
வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யுமாக.
கோளறு பதிகம் 9ஆம் பாடல்
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
விளக்கம்
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மற்ற தெய்வங்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் பலவும், கடலும், மேரு மலையும் அடியார்க்கு நன்மையே விளைவிக்கும்.
கோளறு பதிகம் 10ஆம் பாடல்
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
Kolaru Pathigam விளக்கம்
புத்த மதத்தவரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான வெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
கோளறு பதிகம் 11ஆம் பாடல்
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!
விளக்கம்
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
கோளாறு பதிகம்(Kolaru Pathigam) குறிப்பு:- அனைத்து விதமான கிரக தோஷமும் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் சிவன் அருளால் மகான் திருஞானசம்பந்தர் அருளியது.
தெரிந்து கொள்க:
- Siva Puranam Lyrics in Tamil
- 108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்
- ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்
- கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
- Muthai Tharu Lyrics in Tamil
- Jaya Jaya Devi Song Lyrics in Tamil
- Sivavakkiyar Padalgal Lyrics in Tamil
- Sri Lalitha Sahasranamam Lyrics in Tamil
- Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil
Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்