அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்
இந்த பதிவில் பிளாட், அபார்ட்மெண்ட் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட /அமைக்க வாஸ்து குறிப்புகளை பற்றி காண்போம்.

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வாஸ்து
பல வீடுகள் அடங்கிய குடியிருப்புகள் கட்டும்பொழுது தெற்கு திசையை விட வடக்கு திசையில் அதிக வெற்றிடம் விட்டு கட்ட வேண்டும்.
வாகனங்களை நிறுத்தும் இடத்தை வடமேற்கு திசையில் அமைக்க வேண்டும்.
வாகனங்கள் நிறுத்தும் இடம் வடமேற்கு திசையில் அமைக்க முடியாதவர்கள் தென்கிழக்கு திசையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
அபார்ட்மெண்டில் நுழைவாயில் எந்த திசையில் உள்ளது அதற்கு இடது பக்கத்தில் உள்ள மாடிபடிக்கு இடது பக்கத்தில் உள்ள மூலையில் காவல் காப்பவருக்கான அறையை அமைக்க வேண்டும்.
வடக்கு மற்றும் தெற்கு திசையில் செடிகள் மற்றும் புல்வெளிகள் வைத்து வளர்க்கலாம்.
வடகிழக்கு திசையை தவிர மற்ற திசைகளில் வீட்டல் வளர்க்க வேண்டிய மரங்களை வளர்க்கலாம்.
தெரிந்து கொள்க வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் | மனையடி சாஸ்திரம்
தென்கிழக்கு திசையில் நீர் இறைக்கும் எந்திரம், மின்சார உற்பத்தி செய்யும் எந்திரம் முதலியவற்ற அமைக்க வேண்டும்.
அபார்ட்மென்ட்டின் நிர்வாக அலுவலகத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
கிழக்கு, வடக்கு, வடகிழக்கு திசைகளில் நீச்சல் குளம், நீர்தொட்டி அமைக்க வேண்டும்.
தெரிந்து கொள்க
கிரகப்பிரவேசம் செய்ய முகூர்த்தம் லக்னம் குறிப்பது
ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்