நாய் கனவு பலன்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் நாய் கனவு பலன்கள் (Dog Kanavu Palangal in Tamil) பற்றி பார்ப்போம். பொதுவாக நாய்கள் மனிதர்களிடம் அன்பாகவும் துணையாகவும் பழகும் செல்ல பிராணி, நாய்கள் மனிதர்களை அண்டி வாழ்கின்றது. கிட்டத்தட்ட நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. மனிதர்களை போல நாய்களும் கனவு காணும் ஒரே விலங்கு ஆகும். நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கவும், வேட்டையாடவும் பயன்பட்டது.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

நாய் கனவு பலன்கள்
நாய் கனவு பலன்கள்

நாய்களுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) உணரும் திறன் கொண்டது. நாய்களுக்கு கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள்.

நாய் கடிப்பது போல் கனவு கண்டால்

பொதுவாக, நாய் கடிப்பது போல் கனவு கண்டால் நம்மை பற்றியுள்ள பீடைகள் ஒழியும் என்று முன்னோர்களின் வாய் வழியாக வந்த செய்தி, ஆனால் இப்போதுள்ள நூல்களிலும் மற்றைய வலைத்தளங்களிலும் கெட்ட சகுனமாக குறிப்பிட்டுள்ளனர். நான் நம் முன்னோர்களின் கூறிய பலன்களையே எடுத்துக்கொள்கிறேன்.

நாய் துரத்துவது போல் கனவு கண்டால் தீமை என்றும் அதுவே கடித்தால் நல்லது என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் சில நூல்களில் உள்ள செய்திகளை இங்கே பதிவிட்டுள்ளேன்.

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

நீங்கள் நாய்களால் தாக்கப்படுவதை போல் கனவு வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகலாம்.

நாய் கைகளில் கடிப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய நெருங்கிய நண்பன் அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள நம்பிக்கைக்குரிய நபர் உங்களை ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது.

கருப்பு நாய் கனவில் கண்டால்

உங்கள் கனவில் கருப்பு நாய் வருவது உங்கள் வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் நடக்க இருப்பதாக அர்த்தம்.

இந்த கால கட்டங்களில் நட்பு வட்டாரங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தலைமையால் ஏமாற்றப்படலாம்.

பிரவுன் நாய் கனவில் கண்டால்

உங்கள் கனவில் பிரவுன் நிற நாய் வந்தால் நீங்கள் மோசமான பிரச்சினைகளில் தாமாகவே சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம். இந்த கால கட்டத்தில் பெரிய விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மேலும், நீங்கள் எடுக்கும் முடிவுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை யோசித்த பின்பே முடிவு எடுக்க வேண்டும்.

வெள்ளை நாய் கனவில் கண்டால்

வெள்ளை நாய் உங்கள் கனவில் வருவது நன்மைகள் நடக்க இருப்பதை குறிக்கும். பொதுவாக வெள்ளை நிறம் நாய் கனவில் வந்தால் மன தூய்மையையும் மற்றும் மன அமைதியையையும் குறிக்கும்.

வெள்ளை நிற நாயைகனவில் பார்த்தால் உங்களது நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் என்று பொருள்.

உங்கள் நண்பர்களின் நோக்கங்கள் உங்களுக்கு உண்மையானதாகவும், நன்மையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்