Lagnam in Tamil

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

லக்கின அதிபதி ஸ்தானம்Lagnam in Tamil – ஒவ்வொருவருக்கும் ஜாதக கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே ஜாதகருக்கு முதல் வீடு ஆகும். அந்த வீட்டின் அதிபதியே லக்கினாதிபதியவர். உதாரணம் மேஷ ராசியில் கட்டத்தில் ல என்று இருக்கிறது லக்கினம் மேஷம் ஆகும். அதன் அதிபதி செவ்வாய் ஆவர். இப்பொழுது லக்கினாதிபதி செவ்வாய் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் உள்ளார் என்று பார்த்து பலன் பலன் சொல்லலாம். இந்த பதிவில் லக்கினாதிபதி 12 பாவங்களிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

Lagnam in Tamil
Lagnam in Tamil

லக்கினாதிபதி 1ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதோவது லக்னத்திலே இருந்தோல் ஜாதகர் சுதந்திர மனப்பான்மையுடனும் தன விருப்பம் போல் வாழ்பவராகவும் இருப்பர். யாருடைய உபசாரணையும் கேட்க மாட்டார்.

தீர்க்க ஆயுள், சொத்துக்கள், புகழ், வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வர். தெய்வ நம்பிக்கையும் கொண்டவராக இருப்பர். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நன்கு பழக கூடியவராக இருப்பர்.

லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 2ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குடும்ப வாழ்கை சிறப்பாக அமையும். சபையில் அவருக்கென்று தனி மரியாதையை இருக்கும்.

தனது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவர்.
மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்தவராக வாழ்வார்.

லக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 3ம் வீட்டில் இருந்தால் அதீத துணிச்சல் உள்ளவராக இருப்பார். எல்லா நலன்களும் வாழ்வில் அடைவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.

புத்திசாலியாகவும் மரியாதையாக நடக்கும் குணமும் இருக்கும். வாழ்வில் இருதாரம் அமைப்பு ஏற்படும். ஜாதகர் சகோதர சகோதரரின் அன்பிற்குரியவராக இருப்பார். நுண்கலையில் ஆர்வம் மிகுந்தவர்.

லக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 4ம் வீட்டில் இருந்தால் அழகான தோற்றமும், நற்பண்புகள் உடையவனாகவும் இருப்பான்.
நிலங்கள், வீடு வாசல் பெற்று விளங்குவார். குறிப்பாக தாயின் அன்பு மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பை பெற்றவனாக இருப்பார்.

அடிப்படை தேவைகள் குறைவில்லாமல் சுகவாசியாக இருப்பார். வண்டி வாகனங்கள் அமையும்.

லக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 5ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல புத்திரர்களை பெற்றவராக இருப்பார். நிறைய குழந்தைகள் மற்றும் அவற்றின் அன்பையும் ஒருங்கே பெற்றவராக இருப்பார். சிலருக்கு அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

ஜாதகர் பெருந்தன்மை உடையவராகவும், சேவை மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார். சிலருக்கு வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

லக்கினாதிபதி 6ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 6ம் இடத்தில் இருந்தால் நோய் தொற்றுகள் அதிகமாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது கவனமாக இருக்கவும். மன அமைதி இல்லாத வாழ்கை அமையும், கடன் பிரச்சனைகள் இருக்கும். இருப்பினும் லக்கினாதிபதி தசை நடக்கும்பொழுதும், சுப கிரகங்களின் சேர்க்க மற்றும் பார்வைகளால் இப்பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

லக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 7ம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண நடக்க வாய்ப்புள்ளது. வேறு சிலர் வாழ்க்கையில் கடைசி காலத்தில் சந்நியாச வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும். சுய கவுரவம் அதிகம்.

மனைவியால் சொத்து சேர்க்கும் வாய்ப்பு, சிலர் பெண்ணாசை நிறைந்தவராகவும் இருப்பர். இருப்பினும் சுப கிரக பார்வையினால் பலன்கள் மாறுபடும்.

லக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 8ம் வீட்டில் இருந்தால் சிறந்த கல்வி அறிவு பெற்றவராக இருப்பார்.

நன்னடத்தை குறைந்திருக்கும். சூதாட்ட எண்ணமும் இருக்கும். சிலருக்கு திடீர் மரணம் ஏற்படலாம். மேலும், குழந்தைப்பேறு பிரச்சனை, உடல் அங்கங்களில் குறைபாடு, வறுமை போன்றவை அமைந்திருக்கும். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வையால் இவையனைத்தும் நற்பலனாக மாறும்.

லக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 9ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் அமைந்தவராக இருப்பார். இவர் பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பார்.

ஜாதகருக்கு நல்ல தந்தை, நல்ல மனைவி, குழந்தைகள், முன்னோர் சொத்துக்கள், மற்றும் அனைத்து பாக்கியங்களும் இயல்பாகவே அமையும்,

பெரியவர்களை மரியாதையுடன் நடத்தும் குணமும் அவர்களின் ஆசிகளையும் நிறைய பெற்றிருப்பார். நன்மையில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.

லக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 10ம் வீட்டில் இருந்தால் உத்தியோகத்திலும் பிசினஸ் ழும் பல வெற்றிகளை குவிப்பார். பத்தாம் அடிப்பதிக்கும் லக்கினாதிபதிக்கும் சம்மந்தப்பட்ட தொழில் கொடி கட்டி பரப்பார்.

சமூகத்தில் நற்பெயரும் செல்வாக்கும் கொண்டிருப்பார். அதிகார பதவியிலும், அரசியல் செல்வாக்கும் நிறைந்திருக்கும். ஜாதகர் வீடு வாசல் வண்டி நிலங்கள் அனைத்து வசதிகளையும் கொண்டு வாழ்வார்.

லக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 11ம் வீட்டில் இருந்தால் ஜாதகன் லாபகரமான தொழிலை செய்யும் அமைப்பு ஏற்படும்.

பொதுவாக 11ம் இடத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த இடத்திற்கு எந்த கிரகங்கள் வந்தாலும் சுப பலனையே தரும். அதிலும் லக்கினம் அதிபதி இருந்தால் பலன் இருமடங்காகும்.

ஜாதகனுக்கு நற்பெயரும், சமூகத்தில் செல்வாக்கும் ஏற்படும். மேலும் சகோதர சகோதரிகளின் அன்பிற்கு பத்திரமாவர். ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் வீடு வாகன அனைத்து வசதிகளுடனும் வாழ்வார். மொத்தத்தில் நிம்மதியான வாழ்கை அமையும்.

லக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால்

லக்கினாதிபதி 12ம் வீட்டில் இருந்தால் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் கரைந்து கொண்டே இருக்கும். வியாபாரம் செய்தால் பலன் இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். இதை நல்ல கிரகங்கள் பார்த்தால் மற்றும் சேர்க்கை ஏற்பட்டால் பலன்களில் வித்தியாசம் ஏற்படும்.

அதிலும் லக்கினாதிபதி மேல் தீய கிரகங்களின் பார்வை இருந்தால் ஜாதகருக்கு சராசரியாக ஜாதகருக்கு உணவு உண்பதில் கூட தடங்கல் ஏற்படும். நித்திரை இல்லாமலும் மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.

இந்த இடத்தில் சுப கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்பட்டால் ஜாதகருக்கு பலன் நேர்மாறாக இருக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்