Gmail Space 15GB யை தாண்டிவிட்டதா? அதனை எப்படி clean செய்வது? என்று பார்ப்போம். GMail ல் தேவையற்ற Mail களை நீக்க என்ன செய்ய வேண்டும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

தேடுபொறி(Search Engine) நிறுவனமான கூகுளின் மின்னஞ்சல் அம்சமான Gmail உலகம் முழுவதும் கோடி கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தனிநபர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் கூகிளை உபயோகிக்கிறார்கள்.
கூகுளை ல் நிறைய டூல்கள் இருந்தாலும், Gmail இன்றியமையாதது ஆகும். அதில் memory limit தாண்டியபின்பு எவ்வாறு நீக்குவது என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு Google கணக்கில் 15 GB வரை மட்டுமே இலவச டேட்டாவைச் சேமிக்க முடியும். ஜிமெயிலைத் தவிர, கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ் மற்றும் பிற சேவைகளின் தரவுகளும் பரிந்துரைக்கப்பட்ட Memory யின் கீழ் உள்ளன.
உங்களது Data 15 GB வரம்பை நெருங்கியதும், சேமிப்பகம் நிரம்பப் போகிறது என்பதைக் குறிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
பின்வரும் விதிமுறைகளால் உங்கள் GMail இன்பாக்ஸின் அதிகப்படியான அஞ்சல்களை சில நொடிகளில் காலி செய்துவிடலாம்.

விதி 1: உங்கள் ஜிமெயிலின் தேடல் பட்டியில், இதை டைப் செய்யவும்: has:attachment larger:10M.
விதி 2: 10 மெகாபைட்டுகளுக்கு மேல் உள்ள அனைத்து அஞ்சல்களும் அஞ்சல் பெட்டியில் தோன்றும்.
விதி 3: தோன்றிய Gmail list ல் உங்களுக்கு தேவையற்ற mail களை தேர்வு செய்து, நீக்கு(delete) பொத்தானை அழுத்தவும்.
விதி 4: குப்பை கோப்புறைக்குச் சென்று, ‘Empty Trash ‘ பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் செய்ய வேண்டியது

முக்கியமற்ற மெயில்கள் மூலம் அதிக இடத்தைப் போக்க நீங்கள் ‘subscribe’ செய்த விளம்பர அஞ்சல்கள் மற்றும் செய்திமடல்கள் சில பயன்பாட்டில் உள்ளதா என்று ஆராய வேண்டும்.
பின்னர், இந்த Promotion மெயில்களைத் திறந்து, அவற்றுக்குக் கீழே உள்ள ‘Unsubscribe ’ பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பாப் சாளரம் தோன்றும், மீண்டும் ‘Unsubscribe’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Read More
- இந்தியாவில் கூகுள் பிக்சல் 6a வருகிறது
- புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்களின் முழுமையான பட்டியல்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்