“விவசாயிகள் போராட்டத்தை அவமதிக்கிறார் மோடி!” – தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடல்

மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகச் சென்று விவசாயப் பெருமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது என்றும்

» Read more

தமிழகத்திலும் வலுக்கும் போராட்டம்: ‘டெல்லி சலோ’-வுக்கு ஆதரவாக விவசாயிகள் தீவிரம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம்

» Read more

புயல் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிர்கள் – வேதனையில் தருமபுரி விவசாயிகள்

தருமபுரி மாவட்டத்தில் நிவர் புயலால் நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வங்கக் கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் சென்னை, புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் கரையைக் கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் பெய்த கன மழையாலும், வீசிய காற்றாலும் பெரும் சேதம் ஏற்பட்டது. புயலின் தாக்கம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டம் வரை நீண்டது. தருமபுரி மாவட்டத்தின் கிழக்கு எல்லையான கோட்டப்பட்டி, சிட்லிங்,

» Read more

கடலூர்: 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.மானம்பாடி பகுதியில் வீராணம் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டுள்ள சுமார் 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. வடிகால் முறையாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, சிங்கார குப்பம், கிள்ளை கலைஞர் நகர், பிச்சாவரம் உள்ளிட்ட

» Read more

வேலூரில் பலத்த காற்றுடன் கனமழை: மொத்தமாக சாயும் வாழைமரங்கள்

நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலால் 14 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 16 நிவாரண முகாம்களில் இதுவரை 474 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வேலூரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக மேல் அரசம்பட்டு ஆறு, புலிமேடு காட்டாறு, அகரம் ஆறு, நாகநதி ஆறு உட்பட பாலாற்றின் துணை

» Read more

கடலூர்:  நிவர் புயலின் சீற்றம்.. வாழை, பன்னீர் கரும்பு பயிர்கள் நாசம்

கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக வாழை மற்றும் பன்னீர் கரும்பு சாகுபடி வேரோடு சாய்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக பன்னீர் கரும்பு மற்றும் வாழை சாகுபடி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடியும், சுமார் 500 ஏக்கரில் வாழை சாகுபடியும் செய்யப்பட்டுள்ள நிலையில் நிவர் புயல் காரணமாக சுமார் 50 ஏக்கர் பரப்பிலான

» Read more

“விவசாயிகள் என் கடவுள்” – விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சோனு சூட் ட்விட்

வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் சோனு சூட். ஹரியானா மாநிலம் அம்பாலா வழியாக பேரணியாக சென்ற விவசாயிகளை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழையாமல் இருக்க ஹரியானா மாநில அரசு தனது எல்லைகளை மூடியது. இதுதவிர பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவையும் ஹரியானா அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு

» Read more

காஞ்சிபுரம்: அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

காஞ்சிபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் மதிப்புள்ள நெற்பயிர்கள் நீரில் முழுகி முற்றிலும் சேதமடைந்தது. நிவர் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த உள்ள வேளி யூர், கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த

» Read more

செங்கல்பட்டு: புயலால் 1,300 ஏக்கர் நெல் பயிர்கள் பால் கட்டும் நேரத்தில் முற்றிலும் சேதம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக ஆயிரத்து 300 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்து சேதமாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், சித்தாமூர் ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களில் சம்பா சாகுபடி, வெள்ளை பொன்னி ரக நெல் பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர். நிவர் புயல் பாண்டிச்சேரி அருகே அதிகாலை கரையை கடந்தபோது, கதிர் வந்த அந்த பயிர்களை புயல் சேதப்படுத்தியுள்ளது. புயலால்

» Read more

டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செலுத்தும் தேதியை நீட்டிக்க வேண்டும் :முத்தரசன்

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தாவது “ நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் சென்னை  உள்ளிட்ட பல்வேறு

» Read more

நிவர் புயல் எதிரொலி: பயிர்க்காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த டெல்டா விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற் பயிருக்கு இணைய தளத்தின் வழியாக பயிர்க் காப்பீடு செய்வதற்காக கணினி மையங்களில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களில்  கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அதிக பரப்பில் குறுவை சாகுபடியும், அதிக நெல் கொள்முதலும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பா சாகுபடியை உற்சாகத்தோடு விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். சம்பா நெற் பயிருக்கான காப்பீடு செய்ய காலக்கெடு இருந்தாலும் நிவர் புயல் பாதிப்பையும்

» Read more

விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பரிந்துரைத்துள்ளதாக வேளாண்மை இணைஇயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சிறுகுடல் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதே ஊரைச் சேர்ந்த இடைத்தரகர் ராமலிங்கம் என்பவரிடம் இருந்து உரத்தை வாங்கி மக்காச்சோளத்திற்கு அடி உரமாக பயன்படுத்தினர். இதனையடுத்து சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் போதிய

» Read more

விளைச்சல் இருந்தும் விலையில்லை: ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டப்படும் வெண்டைக்காய்

அதிகப்படியான விளைச்சல் மற்றும், விற்பனைக்கு வாய்ப்பு இல்லாததால் வெண்டைக்காய் விற்பனை அடியோடு முடங்கியது. இதனால் வெண்டைக்காய் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மானாவரி சாகுபடியாகவும், கிணற்றுநீர் பாசன முறையிலும் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேனி, பின்னத்தேவன்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூர், பூதிப்புரம் என மாவட்டம் முழுவதும் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  குறுகிய கால பயிரான வெண்டைக்காயின் விலை எப்போதும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சராசரியாக இருந்ததால் விவசாயிகள் அதிக ஆர்வமுடன்

» Read more

‘ரூ.1,200-க்கு அசத்தல் உபகரணம்!’ – கோவை வேளாண் விஞ்ஞானிகளுக்கு தேசிய தண்ணீர் விருது

கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-வின் (The Indian Council of Agricultural Research) கோவையைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு ‘தேசிய தண்ணீர் விருதுகள் 2019’-க்கான முதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மற்றும் இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில், 2020 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை குடியரசு

» Read more

”இயற்கைதான் எங்களுக்கு முதல் கடவுள்” – இயற்கை வாழ்வியல் முறையில் நிம்மதி அடையும் தம்பதி

கொரோனாத் தொற்று நெருக்கடியைக் கொடுத்தாலும் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்கை முறையைப் பின்பற்றும் மீரா- சாய் முரளி தம்பதியினரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள போலுவப்பட்டியில், வீட்டைச் சுற்றி சுமார் ஒரு ஏக்கரில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார்கள் மீரா- சாய்முரளி தம்பதியினர். தற்சார்பு வாழ்கை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர்கள், மின்சாரத் தேவைக்கு சோலார், குடிநீருக்கு மழைநீர் சேமிப்பு,

» Read more
1 2 3