தமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்

தமிழ் தேசிய கீதங்கள் 1. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் – இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு –

» Read more

ஞான பாடல்கள் பாரதியார்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப

» Read more

தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்

தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் 1. வந்தே மாதரம் ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர்

» Read more

பிற கவிதைகள் பாரதிதாசன்

கவிதைகள் பாரதிதாசன் தருமபுரச் சந்நிதியில் இருவணிகர் திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த – குருமூர்த்தி சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க – ஊர்மதிக்கும் நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் – அன்னார் அருளுவார்: “மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை – உருகாதீர்! அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை – நன்றுரைத்தான்.

» Read more

எதிர்பாராத முத்தம் பாரதிதாசன்

எதிர்பாராத முத்தம் பாவேந்தர் பாரதிதாசன் பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச் செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்

» Read more

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

காதல் நினைவுகள் கவிதை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆடுகின்றாள் கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த புலையுலகம் போக்கினேன். போக்கிக்–கலையுலகம் சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள் நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு. விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்–சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து. சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில் மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்–வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல், கண்கவரும் செம்பவளக் காம்பு. செந்தமிழை

» Read more

அழகின் சிரிப்பு கவிதை – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு கவிதை – புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள்,

» Read more

மற்ற பாடல்கள் பாரதியார்

மற்ற பாடல்கள் பாரதியார் காப்பு-பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி

» Read more

தண்ணீர் தேசம் – கவிஞர் வைரமுத்து

1 கடல்… உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்… ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி

» Read more