அலைபேசிகளை நிறுத்திவிடுங்கள்! குழந்தைகளுடன் ஒருமணிநேரம் செலவிடுங்கள்!

பேரண்ட் சர்க்கிளின் இந்த முயற்சி குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர். எஸ்.கண்ணப்பன் பகிரும் கருத்துக்கள் Source link

» Read more

Marshmallow test with children- Dinamani

  பொதுவாக, பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்லவர்களாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டுமே நம் முடிவு செய்யும் திறன்களில் அடங்கியுள்ளது. இதைப் புரிந்து கொள்ளவே நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கோண்டார்கள். இது மிகப் பிரசித்தி பெற்ற “மார்ஷ்மெல்லோ டெஸ்ட்” (Marshmallow test). இந்த, ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வந்ததில்,

» Read more

Beware of Bispheஈஸ்ட்ரோஜென் சுரப்பை துரிதப்படுத்தும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் – அம்மாக்களே உஷார்!

  பள்ளிச்  சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகுவிரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள், இன்றைய இளம் அம்மாக்களை வெகுவாகக் கவலை கொள்ளச் செய்யும் விசயங்களில் இதுவும் ஒன்று; ஏன் இப்படி ஆகிறது?!  குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் தாண்டி இந்த விசயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண்குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.

» Read more

ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு? குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை!

  அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சுமித்ராவால் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எப்போதும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மகள் ராகவி ஒரு வாரமாகவே காலை எழுந்தவுடனே வயிறு வலி, தலை வலி என ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கு போக அழுவது ஏனென்று புரியவில்லை. இன்றும் காலை ‘வயிறு வலிக்குதும்மா நான் ஸ்கூலுக்கு போகலை’ என்று அழ ஆரம்பித்ததும், ‘ஏண்டி தினம் என் உயிர வாங்குற? ஒழுங்கா

» Read more

உங்கள் குழந்தைகள் அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறார்களா? இதோ சரியான தீர்வு!

  சிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி  என்று யோசிக்கிறீர்கள் தானே! ஆம். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான் நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம். புத்தகப்பைகளால் முதுகுவலி: சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை

» Read more

உடம்புக்கு நன்மை தரும் கடம்ப மரம்!- Dinamani

நான் தான் கடம்ப மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஆந்தோசெபாலஸ் கடம்பா என்பதாகும். நான் ரூபியாசியே (காஃபி குடும்பம்) குடும்பத்தைச் சேர்ந்தவன். நீரோட்டமுள்ள கரைகளில் நான் செழித்து வளருவேன். முருகனுக்கும், திருமாலுக்கும் உரியவன் நான் என சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அதோட நன்னன் என்னும் அரசனின் காவல் மரமாகவும் நான் இருந்திருக்கிறேன். கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க தமிழ் இலக்கியங்களில் என் பெயர் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமா, 1977-ஆம்

» Read more

Breast feeding is good for the baby- Dinamani

ஆரோக்கியமான மூளைவளர்ச்சிக்கு தாய்பால் கொடுங்க! உலக தாய்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7 ‘என் மகன் ரொம்ப வாலு! கொஞ்சம் கூட அடங்கவே மாட்டான்’ இன்று பெரும்பாலான பெற்றோர்கள் பெருமையாக பேசிக் கொள்ளும் விஷயம். குட்டீஸ்கள் சுட்டித்தனமான குறும்பு செயல்கள் செய்வது இயல்புதான்.  அவர்களின் சின்ன குறும்புகள் நம்மை ரசிக்கவும் மகிழவும் செய்யும்.  ஆனால் சில நேரங்களில்  இந்த குறும்புகள் பிள்ளைகளின் இயல்புக்கு மீறியதாக  இருக்கும் பொழுது கவனத்தில் கொள்ள

» Read more

குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil

குடும்ப கதைகள் தமிழ் – Children Short Stories Tamil திருமண வீடு ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான். அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்”

» Read more

சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil

சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil ஊர்வலம் திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர். அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார்.

» Read more

வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்

வலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும். இளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும். வலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள் மயக்கம்

» Read more

குழந்தை வளர்ப்பு உளவியல் ஆய்வு

இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என பார்க்கும்பொழுது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, அவர்களின் செயல்களை புரிந்து கொள்ளவோ, விளையாடவோ, நேரம் ஒதுக்க முடியவில்லை. இது அக்குழந்தையை உளவியல் ரீதியான பிரச்னையை உருவாக்கும். பிரச்சனை வந்தபின் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அக்கறையுடன் கவனிப்பதில் எவ்வித பயனுமில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடைவெளியை உருவாக்கிவிட்டு பின்னர் வயதான பின் தம்மை விட்டு விட்டதாக கூறி வருத்தமடைவதில் பயனில்லை. வளரும் பருவத்தில் குழந்தைகளுடன் நாம்

» Read more

குழந்தை வளர்ப்பும் வீட்டு வைத்தியமும்

முதலில் இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஒருவரை மற்றோருவரோடு ஒப்பிட்டு பேச கூடாது. அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனையே குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை தலைப்பில் பதிவிட்டிருந்தேன். பாரம்பரிய முறை குழந்தைகளுக்கு தேங்காயை துருவி அல்லது சிறியதாக நறுக்கி நன்றாக மென்று தின்ன கொடுக்கலாம். இது தாய்ப்பாலை விட சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் அக்கி நோய் தொற்று ஏற்படும். அதற்கு ஆலம் விழுதை

» Read more

குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை

பெண் குழந்தை பிறந்த குழந்தை எந்த குழந்தையாக இருந்தாலும் அதை பேணி காப்பது பெற்றோரின் கடமை. இன்றும் சில இடங்களில் ஆண் பிள்ளையை அகமகிழ்ந்து ஏற்கும் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் அருமைகளை அறியாமல் அதனை ஏற்க மனம் தடுமாறுகிறார்கள். பெற்றோரின் வயோதிகத்திலும், உடல் நிலை குன்றிய நேரத்திலும் பெண்கள் முன் வந்து பரிவுடன் கவனித்துக் கொள்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிறார்கள்,

» Read more

பிள்ளையின் நடத்தை கோளாறு, அதற்கான சிகிச்சை

பிள்ளையை பெற்றால் மட்டும் போதும் என்று நிறுத்திக் கொள்ளாமல் பிறந்த குழந்தையை நல்வழியில் வளர்ப்பது தான் ஒரு பெற்றோரின் தலையாய கடைமை. “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் “ விளக்கம் தன் பிள்ளையைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் பாராட்டக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். என திருவள்ளுவர் மகான் கூறியுள்ளார். நடத்தை கோளாறு(Conduct Disorder) என்பது வளர் இளம் பருவத்தினரின்

» Read more