108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்

ஆஞ்சநேயர் துதி – ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என அழைக்கப்படுகிறார். இந்த பதிவில் 108 ஆஞ்சநேயர் துதிஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்ஆஞ்சநேயர் 108 மந்திரம்ஆஞ்சநேயர் ஸ்லோகம் மற்றும் ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் ஆகியவற்றை பார்ப்போம்.

108 ஆஞ்சநேயர் துதி
108 ஆஞ்சநேயர் துதி

அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் நம்மை காக்கும் ஆஞ்சநேயரின் 108 துதி மந்திரம் சோதனை வரும் நாட்களில் நம்மை காக்க காற்றைவிட வேகமாய் வந்து வாயுபுத்திரனான அனுமன் நம்மை காப்பார். அவரை நம்பிக்கையுடன் வழிபடும்போது துன்பகளில் விலகி நன்மை பயக்கும்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

108 ஆஞ்சநேயர் துதி

1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி

16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி

46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி

67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி

80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி

94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்

ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம்

ஓம் ஆஞ்சநேயா நம
ஓம் மஹாவீராய நம
ஓம் ஹநூமதே நம
ஓம் மாருதாத்மஜாய நம
ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம
ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம
ஓம் அசோகவநிகாச்சேத்ர நம
ஓம் ஸர்வமாயாவி பஞ்ஜநாய நம
ஓம் ஸர்வபந்தவிமோக்த்ரே நம
ஓம் ரக்ஷவித்வம்ஸகாரகாய நம

ஓம் பரவித்யாபரீஹாராய நம
ஓம் பரஸெளர்யநாஸநாய நம
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம
ஓம் பரயந்த்ரப்ரபேதகாய நம
ஓம் ஸர்வக்ரஹவிநாஸிநே நம
ஓம் பீமஸேநஸஹாயக்ருதே நம
ஓம் ஸர்வலோகசாரிணே நம
ஓம் மநோஜவாய நம
ஓம் பாரிஜா தத்ரு மூவஸ்தாய நம

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம
ஓம் ஸர்வ தந்த்ரஸ்வரூபிணே நம
ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம
ஓம் கபீச்வராய நம
ஓம் மஹாகாயாய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் பலஸித்திகராய நம
ஓம் ஸர்வவித்யாஸம்பத ப்ரதாயகாய நம
ஓம் கபிஸேநாநாயகாய நம

ஓம் பவிஷ்யச்சதுராநநாய நம
ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம
ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம
ஓம் ஸஞ்சலத் வாலஸந்நத்த நம
ஓம் லம்பமாநஸிகோஜ்ஜவ லாய நம
ஓம் கந்த்ர்வவித்யா தத்வஜ்ஞயா நம
ஓம் மஹாபலபராக்ரமாய நம
ஓம் காராக்ருஹவி மோக்த்ரே நம
ஓம் ச்ருங்கலா பந்தமோ சகாய நம
ஓம் ஸாகரோத்தாரகாய நம

ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் ராமதூதாய நம
ஓம் ப்ரதாபவதே நம
ஓம் வாநராய நம
ஓம் கேஸரிஸுதாய நம
ஓம் ஸீதாஸோக நிவாரணாய நம
ஓம் அஞ்ஜநாகர்ப ஸம்பூதாய நம
ஓம் பாலார்க்கஸத்ருஸாந நாய நம
ஓம் விபீஷணபரிகராய நம
ஓம் தஸக்ரீவகுலாந்தகாய நம

ஓம் லக்ஷ்மணப்ராணதாத்தே நம
ஓம் வஜ்ரகாயாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் சிரஞ்ஜீவிநே நம
ஓம் ராமபக்தாய நம
ஓம் தைத்யகார்ய நம
ஓம் விகாதகாய நம
ஓம் அக்ஷஹந்த்ரே நம
ஓம் காஞ்சநாபாய நம
ஓம் பஞ்சவக்த்ராய நம

ஓம் மஹா தபஸே நம
ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸிம்ஹி காப்ராண பஞ்ஜநாய நம
ஓம் கந்தமாதநசைலஸ் தாய நம
ஓம் லங்காபுரவிதாஹகாய நம
ஓம் ஸுக்ரீவஸ்சிவாய நம
ஓம் பீமாய நம
ஓம் சூராய நம
ஓம் தைத்யகுலாந்தகாய நம

ஓம் ஸுரார்ச்சிதாய நம
ஓம் மஹாதேஜஸே நம
ஓம் ராமசூடாமணிப்ரதாய நம
ஓம் காமரூபிணே நம
ஓம் பிங்களாக்ஷõய நம
ஓம் வார்திமை நாசபூஜிதாய நம
ஓம் கபளீக்ருதமார்த்தாண்ட மண்டலாய நம
ஓம் விஜிதேந்தரியாய நம
ஓம் ராமஸுக்ரீவஸந்தாத்ரே நம
ஓம் மஹாராவணமாதநாய நம

ஓம் ஸ்படிகாபாய நம
ஓம் வாகதீஸாய நம
ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம
ஓம் சதுர்பாஹவே நம
ஓம் தீநபந்தவே நம
ஓம் மஹாத்மநே நம
ஓம் பக்தவத்ஸலாய நம
ஓம் ஸஞ்ஜீவநநகர ஹர்த்ரே நம
ஓம் ஸுசயே நம
ஓம் வாக்மிநே நம

ஓம் த்ருடவரதாய நம
ஓம் காலநேமிப்ரமத நாய நம
ஓம் ஹரிமர்கடமாகடாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ஸாந்தாய நம
ஓம் ப்ரஸநாத்மநே நம
ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
ஓம் யோகிநே நம
ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
ஓம் யோகிநே நம
ஓம் ராமகதாலோலாய நம
ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம

ஓம் வஜ்ரநாய நம
ஓம் ருத்ரவீகயஸமுத்பவாய நம
ஓம் இந்திரஜித ப்ரஹிதா மோகப்ரஹ்மா நம
ஓம் ஸ்த்ரவிநிவாரகாய நம
ஓம் பார்த் த்வஜாக்ர ஸம்வாஸிநே நம
ஓம் ஸரபஞ்ஜர பேதகாய நம
ஓம் தஸபாஹவே நம
ஓம் லோகபூஜ்யாய நம
ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம
ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்