தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் | பாரதியார் விடுதலை பாடல்கள் | பாரதியார் தேசபக்தி பாடல் வரிகள்
10. வெறி கொண்ட தாய்
ராகம் – ஆபோகி தாளம் – ரூபகம்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் – தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)
இன்னிசை யாம்இன்பக் கடலில் – எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் – அங்குத்
தாவிக் குதிப்பாள் – எம் அன்னை (பேயவள்)
தீஞ்சொற் கவிதையஞ் சோலை – தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி – மது
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)
பாரதப் போரெனில் எளிதோ? – விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும் – கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

