திருமண கனவு பலன்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

Marriage Kanavu Palangal in Tamil – திருமண கனவு பலன்கள் என்கிற இந்த பதிவில் நாம் கல்யாண சம்பத்தப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

திருமண கனவு பலன்கள்
திருமண கனவு பலன்கள்

யானை மாலையிடுவது போல் கனவு கண்டால் திருமணம் கைகூடும் சமுதாயத்தில் உயர் மதிப்பு கிட்டும்.

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் திருமண தடை நீங்கும். செல்வ வளம் பெருகும்.

திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிட்டும்.

கிணற்றை கனவில் கண்டால் கனவு கொண்டவருக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

பெரிய விருந்தில் உணவு உண்பது போல கனவு வந்தால் அவருக்கு இருந்த திருமண தடை நீங்கும். விரைவில் திருமணம் கைகூடும்.

மங்கள பொருட்களுடன் ஒரு பெண் வீட்டிற்க்குள் நுழைவது போல் கனவு வந்தால், நம் வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சியில் வெற்றி கிட்டும்.

தாலி, மஞ்சள், குங்குமம் போன்ற சுப பொருட்கள் கீழே விழுவது போல கனவு வந்தால், கனவு கண்ட நபருக்கு திருமண சம்பந்த பிரச்சினைகள் உண்டு என பொருள். இறை வழிபடு முக்கியம்.

பொதுவாக திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் மனம் கட்டுப்படுத்தல், தற்காலிகமாக திட்டமிடுதல், சிறை செல்லுதல், கவலை, மன அழுத்தம், மன தளர்ச்சி போன்றவற்றை குறிக்கும்.

மணமக்களை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது

தங்களுடைய திருமணம் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் நடப்பது போல் கனவு கண்டால் தங்களுடைய தவறுகளை நமக்கு ஞாபகப்படுத்துவதாக சில சம்பவங்கள் நிகழப்போவதாக அறியலாம்.

தனக்கு தெரிந்த பெண்ணையே திருமணம் செய்வதாக கனவு கண்டால் தன் வருங்கால மனைவிக்கு நல்ல கணவராக இருப்பார் என்று பொருள்.

அறிமுகம் இல்லாத பெண்ணை திருமணம் முடிப்பது போல் கனவு கண்டால் அவளை கனவில் பார்க்கமுடியாத நிலை இருந்தால், தன் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு மாறுவதை குறிக்கும்.

நோய்வாய்பட்ட பெண் அவருடைய கனவில் அறிமுகம் இல்லாத ஆணை திருமணம் செய்வதாக கனவு கண்டால் அந்த பெண் அந்த நோயினால் மேலும் அவதியுறுவாள்.

பாரம்பரியமான திருமணத்தில் கலந்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நன் மதிப்பும், புதிய வேலையும் கிடைக்கும்.

திருமணம் செய்து கொண்ட பெண் இறந்தது போல் கனவு கண்டால் அவளுக்கு நல்ல வேலை கிடைத்தும்,

கர்ப்பமடைந்த பெண் திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கும்.

திருமணம் ஆனவர்கள், திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதிப்பை உணர்த்தும்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்