கோயில் கனவு பலன்கள்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

கோயில் கனவு பலன்கள்Koil Kanavu Palangal in Tamil – நம்மில் பெரும்பாலாருக்கும் தூங்கும் பொழுது கனவுகள் வருவது இயல்புதான், அது நல்ல கனவாகவும் இருக்கலாம் தீய கனவாகவும் இருக்கலாம், நல்ல கனவுகள் பொதுவாக கனவில் கண்டால் அன்றைய நாள் முழுதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் இருப்போம். அதுவே தீய கனவுகள் கண்டால் நாள் முழுவதும் மன வருத்தத்துடன் இருப்போம். காரணம் நல்ல கனவுகள் நல்ல அதிர்வலைகளை கொண்டுள்ளது.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

கோயில் கனவு பலன்கள்
கோயில் கனவு பலன்கள்

இந்த பதிவில் கோயில் மற்றும் தெய்வம் சம்பந்தமான கனவுகளை கண்டால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.

நீங்கள் கோயிலுக்கு செல்வது போல கனவு கண்டால் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கோயிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக்கொள்வது போல கனவு கண்டால் நீங்கள் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகும்.

கோயிலில் தனியாக இருப்பது போலவும், திடீரென கதவுகள் சாத்தப்படுவது போல் கனவு கண்டால் நீங்கள் செய்துவரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று பொருள். பணம் விரையம் ஏற்படலாம், கவனம் தேவை.

கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை பெறுவது போல கனவு கண்டால் மனக்கவலைகள் ஏற்படும்.

திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

திருவிழாவில் யாரையோ தேடுவது போல கனவு வந்தால் தொழிலும் குடும்பத்திலும் சில பிரசனைகள் உண்டாகும்..

நடை சாத்தப்பட்டுள்ள கோயிலில் வாசலை திறந்து நீங்கள் உள்ளே செல்கிறீர்கள் என்றால் நீங்கள் புதிய முயற்சிகளில் உங்களை ஈடுபடுத்தி வெற்றி அடைய போகிறீர்கள் என அர்த்தம்.

உங்களுடைய கனவில் கடவுளுக்கு நீங்கள் மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் கடவுள் துணையுடன் உங்கள் காரியங்களில் வெற்றியடைய போகிறீர்கள் என அர்த்தம்.

சுமங்கலி பெண் கோயிலில் விளக்கு ஏற்றுவது போல நீங்கள் கனவு வந்தால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நீங்கள் உங்களுடைய கனவில் கடவுளைக் கண்டால் உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலும் வெற்றிபெறுவீர்கள் மேலும் உங்கள் எதிரிகள் எல்லோரையும் வெற்றி கொள்வீர்கள்.

கோயில் கோபுரத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் தடைகள் நீங்கும். இறைவன் மீது நீங்கள் கொண்டிருக்கும் பக்தி உங்களை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டு இருக்கும்.

நீங்கள் திருநீறு பூசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நல்ல ஞானம் அறிவு கிடைக்கும்.

விநாயக பெருமானை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் திடீர் பண வரவு ஏற்படும்.

அம்மனை கனவில் கண்டால் அம்பாளுடைய பரிபூரண அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும் என அர்த்தம்.

முருகப்பெருமானை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கிவிட்டது என பொருள். உங்களுக்கு நடக்க இருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைத்து நன்மையாகவே முடியும்.

கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிட்டும்.

கடவுளிடம் நீங்கள் பேசுவது போல கனவு கண்டால் மிகவும் நன்மை. எடுத்த காரியத்தில் கடவுள் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெறுவீர்கள்.

கோவில் மணியை நீங்கள் கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி உண்டாகும்.

கோயில் மணி அடிப்பது போல கனவு வந்தால் நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து பொருள் சேரும்.

நீங்கள் கோயில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்களில் தடைகளும், இடையூறுகளும் உண்டாகும்.

கோயில் கனவு பலன்கள் – கேள்வி பதில்கள்

சிவன் கனவில் வந்தால் என்ன பலன்?
சிவனை கனவில் கண்டால் ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

குலதெய்வம் கோயில் கனவில் வந்தால் என்ன பலன் ?
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.

அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்?
அம்மன் தெய்வங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

திருப்பதி கனவில் வந்தால் என்ன பலன்?
திருப்பதி செல்வது போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்

குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன்?
குலதெய்வம் கனவில் வந்தால் சுபிட்சம் உண்டாகும். குலதெய்வ வழிபடு செய்வது நல்லது.

கோயில் தேர் கனவில் வந்தால் என்ன பலன்?
தேர் இழுப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத செய்திகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

கனவில் பெருமாள் வந்தால் என்ன பலன்?
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்று பொருள்.

கோயில் இடிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கோயில் இடிவது போல் கனவு கண்டால் உங்களுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்