கிணறு கனவு பலன்கள் – Kinaru Kanavu Palangal in Tamil – இதற்கு முந்தைய பதிவுகளில் பலவிதமான கனவு பலன்கள் தகவல்களை பார்த்தோம். நாம் இந்த பதிவில் கிணறு பற்றிய கனவுகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக நீர் நிறைந்த கிணற்றை கனவில் காண்பது நல்லது.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

கிணற்றை கனவில் கண்டால் திருமணம் கைகூடும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
நீங்கள் கிணற்றில் தண்ணீரை எடுப்பது போல கனவு கண்டால், நீங்கள் நினைக்கும் காரியங்கள் கைகூடி வரும்.
கிணற்றில் இறங்கி நீந்துவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று முன்னேறி செல்வீர்கள் என்று பொருள்.
கிணற்றில் உங்கள் தலையை யாரோ அழுத்துவது போல கனவு கண்டால் பொதுவாக நல்லதல்ல, கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
நீரில்லாத வெறும் கிணற்றை கனவில் கண்டால் செல்வம் வளம் குறையம்.
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்தால் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறக்க நேரிடலாம். இல்லையென்றால் அதற்கு இணையான கஷ்டங்கள் ஏற்படும்.
நீங்கள் ஒரு கிணற்றை தோண்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டு..
மற்றவருக்கு நீங்கள் கிணறு தோண்டி கொடுப்பதை போல கனவு கண்டால் உங்கள் திறமையின் மூலமாக இன்னொருவர் அதிகம் சம்பாதிப்பார்.
கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல கனவு கண்டால் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுப செய்திகள் வந்துசேரும்.
குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறலாம்.
குழந்தையை நீங்கள் கிணற்றில் போடுவது போலவும் பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் உங்கள் மனது அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்று பொருள். செய்யும் செயல்களில் கொஞ்சம் கவனமாக நிதானமாக பொறுமையாக செயல்பட வேண்டும்.
கிணற்றில் குதிப்பது போல கனவு கண்டால் உங்களுடைய துன்பங்கள் விலகும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
- More – All kanavu palangal in Tamil | நாய் கனவு பலன்கள் | பாம்பு கனவு பலன்கள் | மாடு கனவு பலன்கள் | இரத்தம் கனவு பலன்கள்
- Video – திருமண கனவு பலன்கள் | கிணறு பற்றிய கனவுகள் கண்டால் என்ன பலன்கள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்