Skip to content
Home » ஆன்மிகம் » வீடு கனவு பலன்கள்

வீடு கனவு பலன்கள்

வீடு கனவு பலன்கள் – House Kanavu Palangal in Tamil – அனைவருக்கும் வணக்கம், இந்த வீடியோவில் நாம் வீடு சம்பந்தமான கனவுகள் கண்டால் என்ன பலன்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று பார்ப்போம்.

வீடு கனவு பலன்கள்
வீடு கனவு பலன்கள்

வீடு கனவு பலன்கள்

குடிசை வீட்டை கனவில் கண்டால், உங்களின் பொருளாதார நிலை உயரும் என்று அர்த்தம்.

ஏதேனும் வீட்டு வாசலில், தோரணம் தொங்கியவாறு இருப்பதை கனவில் கண்டால் மிகவும் நல்லது. உங்கள் இல்லம் தேடி நற்செய்தி வரப்போகிறது என்று பொருள்.

புதிய வீடோ அல்லது கட்டிடமோ உங்கள் கனவில் வந்தால், தொழிலில் அடுத்த கட்டத்திற்கு போவீர்கள் என்று பொருள்.

உங்கள் கனவில் அழகான நல்ல வீட்டை பார்த்தால், நல்ல செய்தி வீடு தேடி வரும் என்று பொருள்.

ஆடம்பரமான மளிகை கனவில் வந்தால், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர்களிடம் நட்பு உண்டாகும்.

கனவில் நீங்கள் வீட்டை தேடுவது போல வந்தால், உங்களுக்கு வேண்டாதவர்களின் சந்திப்பு ஏற்படும். கவனம் தேவை.

உங்கள் சொந்த வீட்டையே தேடுவது போல கனவு கண்டால், நீங்கள் மரியாதையாக பார்க்கும் நபருடன் இருந்து பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கனவில் வீடு கட்டுவது போல வந்தால், சோதனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

உயரமான, பல மாடி கட்டிடத்தை கனவில் கண்டால், உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவருக்கோ பிரச்சனைகள் உண்டு என பொருள்.

நீங்கள் வீடு இல்லாமல் இருப்பது போல கனவில் கண்டால், எடுக்கும் முயற்சிகளில் அல்லது திட்டங்களில் சிக்கல்கள் உண்டாகும் என்று பொருள்.

வீட்டிலிருந்து புறப்பட்டு ஏதாவது வித்தியாசமான இடத்திற்கு செல்வது போல கனவு வந்தால், இடமாற்றத்தை குறிக்கும். நீங்கள் தொழில் ரீதியாகவோ வேறு காரணத்திற்காகவோ பயணம் செய்வீர்கள்.

வீடு இடிந்து விழுவது போல கனவு வந்தால், உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும்.

புதிய வீடு வாங்குவது போல கனவு கண்டால், வீட்டில் சுப காரியங்கள் நடக்க இருப்பதை குறிக்கும்.

பாழடைந்த வீடுகளை கனவில் கண்டால் நல்லதல்ல. ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட போகிறது என்று பொருள்.

சொந்த வீட்டை விட்டு வெளிய போவது போல கனவு கண்டால், நோயினால் பாதிப்பு ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஜன்னல்கள் இல்லாத வீட்டை கனவில் கண்டால், சிக்கல்கள் வரப்போவதை குறிக்கும்.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்