விவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்
விவசாயத்தில் சர்வதேச புழுகு
உலகம் முழுதும் நெல் உற்பத்தியை பெருக்குவதன் முயற்சியாக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மணிலாவில் உருவாக்கினார்கள். IRRI என்பது அதன் பெயர். நிறைய படங்களோடு புத்தகம் வெளியிட்டனர். தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது. அதில் ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருந்தது.
உண்மை மறைக்கப்பட்டது
செடிக்கு 13 வகையான சத்துக்கள் தேவை. இவற்றில் உயிர்க்காற்று, நீர்க்காற்று, கரிக்கற்று, காற்றிலிருந்து கிடைக்கின்றன, ஆனால் நைட்ரஜன் நாம்தான் தரவேண்டியுள்ளது என்று. இதில் உண்மையில் அப்படியில்லை.
நைட்ரஜனும் காற்றிலிருந்தே கிடைக்கிறது.
சுற்றுசூழலில் 78% நைட்ரஜன் 21% உயிர்க்காற்று மீதி 1% மற்றவை. இந்த உண்மையை மறைத்து உப்பு விற்பனைக்காக புத்தகம் போடுகிறார்கள். இங்கே விஞ்ஞானிகள் என்பவர்கள் உர வியாபாரிகளின் தரகர்கள் என்று.
வருடம் 1920க்கு முன்பு இந்த உப்புக்களை நாம் போடவில்லை. அப்போதும் பூமி விளைந்து கொண்டுதானே இருந்தது. அப்போது நைட்ரஜன் யார் கொடுத்தார்கள். பூமியில் நுண்ணுயிர்கள் நிறையவே இருக்கின்றன. இதை கிருமிகள் என்று சமஸ்கிருதத்தில் நமக்கு சொல்லி கொடுத்தார்கள். கிருமிகள் என்றாலே நோய்கள் என்று நம் நினைவுக்கும் வந்து விடுகிறது.
உண்மையை புரிந்துகொண்டு நாட்டுவளம் காப்போம் இயற்கை விவசாயம் பின்பற்றுவோம். நம்மாழ்வார்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
மேலும் காண்க
Video: அம்மா பற்றிய வரிகள்