Skip to content
Home » தமிழ் இலக்கணம் » வியங்கோள் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று

இந்த பதிவில் வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன? வியங்கோள் பொருட்கள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், எதிர்மறை வியங்கோள், ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்று வேறுபாடு ஆகியவற்றை பார்ப்போம்.

வியங்கோள் என்றால் ஏவுதல் அல்லது கட்டளையிடுதல் ஆகும். வியங்கோள் வினைமுற்று தமிழ் இலக்கண இலக்கியத்தில் பழங்காலம் முதல் இன்று வரை வழக்கில் இருந்து வருகிறது. இது எந்த பொருள்களில் வரும், அதனுடைய விகுதிகள் யாவை என்பனவற்றை பார்ப்போம்.

வியங்கோள் வினைமுற்று – க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூன்று இடங்களுக்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி – வாழ்க
இயவிகுதி – வாழிய
அகரவிகுதி – வர
அல்விகுதி – ஒம்பல் உண்க
உண்ணிய
உண்ணியர்
உண்ண
எனல் யான்,யாம்
நீ, நீர்
அவன்,
அவள், அவர்,
அது, அவை

வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க
ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

வியங்கோள் பொருள்கள்

வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது.
1. வாழ்த்தல்
2. வைதல்
3. வேண்டல்
4. விதித்தல் ஆகியவையாம்.

வெல்க, வாழ்க-வாழ்த்தல் பொருள்
வீழ்க, ஒழிக-வைதல் பொருள்
வருக, உண்க-விதித்தல் பொருள்
அருள்க, கருணைபுரிக-வேண்டல் பொருள்

இவற்றை முன் குறிப்பிட்டவாறு வாழ்க நான், வாழ்க நீ, வாழ்க அவன் என்பன போன்று ஐம்பால் மூவிடத்திற்கும் பயன்படுத்தலாம்.

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

க, ய என்கிற இரு உயிர்மெய் எழுத்துகளும் ரகர ஒற்றை இறுதியில் பெற்ற இய, இயர் என்பன போன்ற விகுதிகளும் வியங்கோளில் மிகுதியும் வரும்.

வருக, வாழிய, வாழியர் என்பன அதற்குச் சான்றுகள்.

எதிர்மறை வியங்கோள்

உடன்பாட்டுப் பொருளில் வியங்கோள் வருவது போன்று எதிர்மறைப் பொருளிலும் இது கையாளப் பெறுவதுண்டு.

வாரற்க,கூறற்க,செல்லற்க
வாரல்,செல்லல்,பகரேல்

என்பன போன்று இச்சொற்கள் அமையும்.

இந்நிலையில் ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால் குழப்பமும், மயக்கமும் ஏற்படும்.

ஏவல் – வியங்கோள் வேறுபாடுகள்

ஏவல் 

கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.

முன்னிலைக்கு மட்டும் உரியது

ஒருமை, பன்மை வேறுபாடுகள் உண்டு.

வியங்கோள்

வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும்.

தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடங்களுக்கும் உரியது.

ஒருமை, பன்மை வேறுபாடுகள் இல்லை

Read More

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்