வளமான வாழ்வு தரும் கருட தரிசனம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்! நமக்கு ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் கருட தரிசனம் பற்றிய பதிவினை இங்கு பார்ப்போம். எந்த கிழமையில் கருட தரிசனம் செய்தால் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.

வளமான வாழ்வு தரும் கருட தரிசனம்
வளமான வாழ்வு தரும் கருட தரிசனம்

அதற்கு முன்னாள் கருடன் பற்றிய சிறு தகவலை தெரிந்துகொள்வோம். கருடன், பெருமாளின் வாகனமாய் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால், இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பார்கள்.

அனைத்து நாட்களிலும், அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் கைகூடும்.

வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது நல்ல பலனை தரும். அதேபோல, சுவாதி நட்சத்திரத்தன்று மாலை நேரத்தில் கருட தரிசனம் செய்வது மிகவும் விஷேசம் ஆகும்.

மேலும், தேவலோகத்தில் இருந்து, கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே, பூமியில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

வாருங்கள் இனி எந்த கிழமைகளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் என்று பார்ப்போம்

வளமான வாழ்வு தரும் கருட தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ நோய்களும் நிவர்த்தி ஆகும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைத் தரும். பிதுர் சாபம், பிதுர் துரோகம் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

திங்கட்கிழமை
ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும். கடகராசி மற்றும் கடக லக்னகாரர்கள், திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமை

நிலம், வீடு, மனைகள் போன்றவற்றில் குறைகள் அல்லது அவை சம்பந்தமான பிரச்சினைகள் நிவர்த்தி அடைய செவ்வாய்க்கிழமை அன்று கருட தரிசனம் செய்வது நல்ல பலனை தரும்.

செவ்வாய் அதிபதியாக கொண்ட ராசி, லக்னம், நட்சத்திரக்காரர்கள், மற்றும் செவ்வாய் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும். இவர்கள் தொடர்ந்து வழிபட வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.

புதன் கிழமை

அறிவு கிரகமான புதன், கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். பத்திரம், பதிவுத்துறை சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி, வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.

புதன் கிரகத்தை ராசி மற்றும் லக்ன அதிபதியாக கொண்டவர்கள்,
மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், புதன்கிழமை கருட தரிசனம் செய்தால் வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும்.

வியாழக்கிழமை

வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும்.
இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத்திற்காக கோயில்களில், குளங்களில், எரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதை பார்க்கலாம். குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி. மேலும், புத்திரப்பேறு வேண்டுவோர் வியாழக்கிழமை கருட தரிசன செய்து அனுகூலத்தை பெறலாம்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை கருட தரிசனம் செய்ய, நோய், கடன், எதிரிகளின் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். சுக்கிரன் பகவான், ஒருவருடைய ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடங்களில் இருந்தாலும், நீச்ச நிலை, அஸ்தமனம், வக்கிரம், பாதகம் நிலையில் இருந்தாலும், வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்! அனைத்து பிரச்சினைகள் நீங்கி சுபிட்சங்கள் உண்டாகும். சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்ன காரர்கள், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

சனிக்கிழமை

வேலைக்காரர்கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர்கள், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள்.
மேலும் சனி பகவான், ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடங்களில் இருந்தாலும், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற கிரக தொடர்புகள் பெற்று இருந்தாலும், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் சுபங்கள் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்