யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
யோகத்தின் எட்டு அங்கங்கள்
இயமம் மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல்.
நியமம் புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை.
பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
ப்ரத்யாஹரம்(தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
தாரானை( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
தியானம்(தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
சமாதி (பதஞ்சலி) (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
அருமை ! அருமை ! அருமை !
யோகா பற்றி அதிகமாக பதிவுகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம் ? தோழா !
வாழ்க வளமுடன் !
உங்களது பணி சிறக்க என் இனிய நல்வாழ்த்துக்கள் !
Inum yoga details more Vann sir
kandippaga
Comments are closed.