யானை கனவு பலன்கள்

யானை கனவு பலன்கள்Elephant Kanavu Palangal in Tamil – உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் கனவு வருவது உண்டு. அதில் சில கனவுகள் அர்த்தமற்றதாக இருக்கும். சில கனவுகள் நம் நடைமுறை வாழ்க்கை அல்லது செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் கனவுகளில், இந்த வீடியோவில், யானையை கனவில் கண்டால் என்ன பலன், என்று தெரிந்துக்கொள்ளலாம். (Video – யானையை கனவில் கண்டால் என்ன பலன்)

யானை கனவு பலன்கள்

பொதுவாக, யானையை கனவில் கண்டால், நல்ல விஷயம்தான், திருமணம் கைகூடும். அல்லது வேறு சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்று பொருள்.

பெண் யானையை கனவில் கண்டால், குடும்பத்தில் உள்ள பெண்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்.

யானை மீது அமர்ந்து சவாரி செய்வது போல கனவு வந்தால், நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

யானை கனவு பலன்கள்

யானை கனவு பலன்கள்

யானை கூட்டத்தை கனவில் கண்டால் நல்லதல்ல, நீங்கள், எதோ பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் அல்லது சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

மதம் பிடித்த யானையை கனவில் கண்டால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் வாக்கு வாதம் உண்டாகும். அவர்களிடம் பணிந்து செல்வது நல்லது.

உங்களை யானை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

யானையுடன் நட்பாக இருப்பது போல கனவு கண்டால், தனவரவு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

யானை உங்களுக்கு மாலையிடுவது போல கனவு வந்தால், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும், பணியிலுள்ளோருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று பொருள்.

யானையை கண்டு பயம் கொண்டுள்ளது போல கனவு வந்தால், செய்யும் காரியங்களில் தடை உண்டாகும். எந்த செயலையும் தள்ளிப்போடுவது நல்லது.

யானையை கொல்வது போல கனவு கண்டால், உங்களுடைய பிரச்சனைகள் தற்போதைக்கு தீராது என்று பொருள், விநாயகர் கோயிலுக்கு சென்று வருவது நல்லது.

யானை உங்களை துரத்துவது போல கனவு கண்டால், தர்ம சங்கடமான சூழல் உண்டாகும். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் யானைக்கு உணவு அளிப்பது போல கனவு வந்தால் மிகவும் நல்லது. உங்களுக்கு, நல்ல விஷயங்கள் நடக்க இருப்பதை குறிக்கிறது.

யானை உங்கள் வீட்டு வாசலில் நிற்பது போல கனவு வந்தால், ஒரு நல்ல செய்தி உங்கள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.

Read More

You may also like...