சொற்களின் வகை
1. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
பெயர்ச் சொற்களின் வகைகள்
2. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும்.
பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.
3. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.
4. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம். மரம், மலை, கடல், சோறு
இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடுகுறி பெயராயின.
5. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம்.
பறவை, அணி, பொன்னன், கணக்கன்
பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.
6. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.
உதாரணம்.
முக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு
முக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
அந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
முள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
கறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
7. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என இரு வகைப்படும்.
8. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்
உதாரணம்.
மரம், விலங்கு, பறவை
இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.
9. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.
உதாரணம்.
ஆல், கரி, காரி
இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி – கரிக்குருவி.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
- Read More: தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபுகள்
- தெரிந்து கொள்க
- தமிழ் இலக்கண நூல்கள்
- தமிழ் இலக்கணத்தின் வகைகள்
- தன்மை வினைமுற்று
- முற்று வினை என்றால் என்ன
- இடவேற்றுமை பெயர்கள்
- வேற்றுமை உருபு
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- தமிழ் பழமொழிகள்
- Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்