புனர்பூ தோஷம் விளக்கம்

புனர்பூ தோஷம் விளக்கம்(Punarphoo Dosha in Tamil) – இந்த பதிவில் புனர்பூ தோஷம் என்றால் என்ன? அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் மற்றும் பரிகாரம் பற்றி பார்ப்போம். பொதுவாக சந்திரன் மற்றும் சனி கிரகங்களினால் ஏற்படும் தோஷமே புனர்பூ தோஷம் ஆகும். இந்த தோஷமானது பொதுவாக திருமணத்தடையை உண்டாக்கும்.

புனர்பூ தோஷம் விளக்கம்
புனர்பூ தோஷம் விளக்கம்

புனர்பூ தோஷத்தினால் ஏற்படும் விளைவுகள்

திருமணம் கால தாமதமாகும்.

வரன் பார்த்து சென்றவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் காத்திருக்க வைப்பது.

இவர்கள் சென்று வரன் பார்ப்பவர்களுக்கு திருமணம் நடந்து விடும்.

தாலி கட்டும் முந்தைய நேரத்தில் கூட சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

நிச்சயதார்த்ததுடன் திருமணம் நின்று போதல் போன்றவை ஏற்படும்.

புனர்பூ தோஷ காரணிகள்

சந்திரன் சனி கிரகத்தினால் ஏற்படுவதே புனர்பூ தோஷம் என ஏற்கெனவே கூறியுள்ளோம். அவற்றை பார்ப்போம்.

சந்திரன் சனி வீட்டில் இருப்பது.

சனி சந்திரன் வீட்டில் இருப்பது.

சனி, சந்திரன் ஒருவருக்கொருவர் நேரடியாக பார்த்துக்கொள்வது.

சந்திரன், சனி ஒரே பாவகத்தில் இணைந்திருப்பது.

சனி, சந்திரன் நட்சத்திரம் சாரத்தில் நிற்பது

சந்திரன், சனி நட்சத்திர சாரத்தில் நிற்பது போன்ற காரணிகள் புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்

சந்திரனின் காரகமாகிய பச்சை அரிசியில் செய்த உணவினை சனியின் காரகம் பெற்ற உழைப்பாளிகள், உடல் ஊனமுற்றோர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவர புனர்பூ தோஷம் நீங்கும்.

சந்திரனின் ஸ்தலமான திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களில், சனி பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலும் திருப்பதி பெருமாள் தரிசனம் செய்வது பிரச்சனைகளை குறைக்கும்.

ஏழை எளியோரின் திருமணத்திற்கு தாலி வாங்கி தருவது அல்லது திருமணத்திற்கு இயன்ற உதவியை செய்வது நல்லது.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்