புத்திர தோஷம் அமைப்புகள்

புத்திர தோஷ ஜோதிடம் அமைப்புகள் – ஜோதிடத்தில் புத்திர தோஷம் என்றால் என்ன? அதற்கான ஜாதக அமைப்புகள் என்னெனென? மற்றும் தோஷம் தொடர்பான பாவகங்கள் எவை? புத்திர தோஷ நீங்க பரிகாரம் என்ன? என்று விரிவாக பார்ப்போம். கீழ்காணும் பதிவுகள் பழைய நூல்களில் நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பதிவிட்டுள்ளேன். தெளிவாக படித்து புரிந்து கொள்ளவும்.

புத்திர தோஷம் அமைப்புகள்
புத்திர தோஷம் அமைப்புகள்

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் புத்திர தோஷ /குழந்தைகள் சம்பந்தப்பட்டபாவகம் 5ஆம் பாவகம் ஆகும். குழந்தைக்கு காரக கிரகம் குரு ஆவார். 5ஆம் பாவகதிபதி பலமிழந்து மற்றும் குருவும் நீசம் அடைந்தோ அல்லது அஸ்தமனம் அடைந்தோ இருந்தால் புத்திர தோஷம் அடைந்த ஜாதகம் எனலாம்.

Read More: சனி தோஷம் விளக்கம்செவ்வாய் தோஷ விதிவிலக்கு

ஜாதகத்தில் புத்திர தோஷம் அமைப்புகள்

5,8ஆம் அதிபதிகள் அல்லது 5,12ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று குரு பலம் இல்லாமல் இருந்தால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

7ல் சனியும், 8ல் செவ்வாயும், 5ல் ராகுவும் நின்றால் புத்திர தோஷத்தை உண்டாக்கும்.

9ல் செவ்வாய், சூரியனுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்து, லக்கினாதிபதியும் சனியும் 11ல் இருக்க புத்திர தோஷத்தை உண்டாக்கும்.

5ஆம் பாவகாதிபதி 8ஆம் இடத்தில இருக்க 7ஆம் அதிபதி 5ல் இருந்து ஜாதகருக்கு குருபலம் இல்லாமல் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.

5ஆம் ஸ்தானாதிபதி தனியாக புதன் வீட்டில் இருக்க பாவ கிரகங்களின் பார்வை அல்லது மற்ற தொடர்பு பெற்றால் புத்திர தோஷம் உண்டு.

லக்கினத்தில் செவ்வாய், 7ல் சனி, 12ல் சூரியன் இருக்க புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

ஜென்ம லக்கினம், ராசி மற்றும் 5ஆம் இடத்தை சனி பார்க்க புத்திர தோஷம் உண்டாகும்.

4ஆம் பாவகத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து 5ஆம் வீட்டின் அதிபதி 12ஆம் வீட்டில் பாவர்கள் தொடர்புடன் இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தும்.

1,5,8,12ல் சனி மற்றும் செவ்வாய் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

எளிதாக கூற வேண்டுமென்றால் 1,5,7,9 ஆம் பாவகங்கள் வலிமை இழந்து குருவும் பலமிழந்து இருக்கும் ஜாதகத்தில் புத்திர தோஷம் கண்டிப்பாக உண்டு எனலாம்.

புத்திர தோஷ பரிகாரம்

வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யுங்கள்.

வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை நிவேதனம் செய்து வாருங்கள்.

குலதெய்வ வழிபாடு செய்வது மிகசிறந்த பலனை தரும்.

வியாழக்கிழமைகளில் பசு மாடு, யானைக்கு உணவளித்து வருவது நல்லது(கீரை, வாழைப்பழம்)

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்