பாம்பு கனவு பலன்கள்

பாம்பு கனவு பலன்கள் – Snake Kanavu Palangal in Tamil – பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம் ஆகும். உலகளவில் வெள்ளை பாம்பு, கருநாகம், பச்சை பாம்பு, மஞ்சள் நிற பாம்பு, பெரிய விசமில்லாத பாம்புகள் என தோராயமாக 3,600 இனங்கள் உள்ளன.

பாம்பு கனவு பலன்கள்
பாம்பு கனவு பலன்கள்

அவற்றில் சுமார் 600 இனங்கள் விஷம் உடைய பாம்புகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுடையவை.

இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக பாம்பை வழிப்பாட்டுக்கு உரியதாகக் கருதி மக்கள் அதனை வழிபட்டு வருகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களில் நாக வழிபாடு, சர்ப்ப சாந்தி செய்வது, புற்றுக்குப் பால் கொடுப்பது போன்ற வழிபாடுகளை பழங்காலம் முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள் மற்றும் நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகின்றது.

எப்பொழுது அதிகமாக வரும்

ஜாதக ரீதியில் ஒருவருக்கு ராகு திசை சனி புத்தி, சனி திசை ராகு புத்தி, ராகு திசை ராகு புத்தி, நடைபெற்றாலும், பிறப்பு ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு, கேது இருந்தாலும் அவை தொடர்பு பெற்றாலும் கனவில் பாம்புகள் வரும்.

நம்மை பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு நீங்கும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பாம்பு விரட்டுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

பாம்பு தரையில் மூன்று முறை கொத்துவது போல் கனவு கண்டால் ஒருவரைப் பிடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்று பொருள்.

பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால் பிடித்த பீடைகள் வறுமைகள் நீங்க போகின்றது என்று பொருள்.

பாம்புகள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால், முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்ற கனவு கண்டால் அல்லது பாம்பு நம் மீது ஊர்ந்து செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம்.

நல்ல பாம்பைக் கனவில் கண்டால் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

பொதுவாக இரட்டைப் பாம்புகளை கண்டால் நமக்கு நன்மையே ஏற்படும்.

பாம்பை கொல்வதாக கனவு கண்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் நம்முடைய பீடைகள் நீங்கி தனலாபம் பெறப்போகிறோம் என்று பொருள்.

கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணம் சேரும் செல்வாக்கு உயரும்.

வெள்ளை நாகம் கனவில் வந்தால் எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து முடிவெடுங்கள்.

ஒரு கருநாகம் பாம்பு உங்கள் கனவில் வந்தால் வாழ்க்கையில் ஒரு மோதல் சூழ்நிலையை எச்சரிக்கிறது. அதனால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பச்சை பாம்பு கனவில் வந்தால் நிச்சயமாக உங்கள் முன்னேற்றத்தை தடுக்க விரும்பும் சிலர் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் தடைகளை இறைவன் அருளால் முறியடிக்க முடியம்.

ஒரு மஞ்சள் நிற பாம்பு கனவில் கண்டால் முரண்பாடான செயலை குறிக்கும். ஆதலால் எடுக்கும் முயற்சிகளில் நிதானமாகவும் ஜாக்கிரதையாகவும் பல முறை சிந்தித்து எடுக்க வேண்டும்.

பரிகாரம்

பாம்பு கனவில் அடிக்கடி கனவில் வருகிறதென்றால், குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது மற்றும் சர்ப்ப சாந்தி செய்யலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்