பாதகாதிபதி என்றால் என்ன?
பாதகாதிபதி என்றால் என்ன? – “பாதகம் ” என்பது கெடுதல் என்று பொருள். பாதகம் செய்யும் வீட்டினை பாதகஸ்தானம் என்றும் அந்த வீட்டின் அதிபதியை “பாதகாதிபதி” என்கிறோம்.

பாதகாதிபதி என்றால் என்ன
பாதகாதிபதி நேரடியாக பாதகத்தை செய்யாது, நிறைய பேர் பாதகாதிபதி என்றால் பயந்து விடுகிறார்கள். பாதகாதிபதி உண்மையில் தன்னுடைய ஆதிபத்திய வீட்டின் பலனை கொடுத்து அதில் ஏதாவது ஒரு குறையை வைத்து விடும் அவ்வளவுதான்.
எளிதில் புரியும்படி கூறுகிறேன், சர ராசிகளுக்கு 11ஆம் வீட்டின் அதிபதி பாதகாதிபதி என்றால் ஜாதகருக்கு லாபம் உண்டு அனால் சில விரையத்தையோ, பிரச்சனையையோ கொடுத்துதான் அந்த லாபத்தை பெற வைக்கும்.
மேலும், பாதகாதிபதி சர, ஸ்திர, உபய ராசிகளுக்கு ஏற்ப மாறுபடும். சர ராசிகளுக்கு 11ஆம் வீட்டின் அதிபதி பாதகாதிபதி ஆவார். ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் வீட்டின் அதிபதி பாதகாதிபதி ஆவார். உபய ராசிகளுக்கு 7ஆம் வீட்டின் அதிபதி பாதகாதிபதி ஆவார்.
தெரிந்து கொள்க:- 27 நட்சத்திர பொது பலன்கள் | 27 நட்சத்திரங்கள் அதிபதி
சர ராசி பாதகாதிபதி
மேஷம், கடகம், துலாம்,மகரம் சர ராசிகள் ஆகும்.
மேஷ ராசியின் பாதகாதிபதி சனி ஆவார்.
கடக ராசியின் பாதகாதிபதி சுக்கிரன் ஆவார்.
துலாம் ராசியின் பாதகாதிபதி சூரியன் ஆவார்.
மகர ராசியின் பாதகாதிபதி செவ்வாய் ஆவார்.
ஸ்திர ராசி பாதகாதிபதி
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஸ்திர ராசிகள் ஆகும்.
ரிஷப ராசியின் பாதகாதிபதி சனி ஆவார்.
சிம்மம் ராசியின் பாதகாதிபதி செவ்வாய் ஆவார்.
விருச்சிகம் ராசியின் பாதகாதிபதி சந்திரன் ஆவார்.
கும்பம் ராசியின் பாதகாதிபதி சுக்கிரன் ஆவார்.
உபய ராசி பாதகாதிபதி
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் உபய ராசிகள் ஆகும்.
மிதுன ராசியின் பாதகாதிபதி குரு ஆவார்.
கன்னி ராசியின் பாதகாதிபதி குரு ஆவார்.
தனுசு ராசியின் பாதகாதிபதி புதன் ஆவார்.
மீனம் ராசியின் பாதகாதிபதி புதன் ஆவார்.
Read More
- திருமண பொருத்தம்
- Star Matching Table for Marriage in Tamil
- சனி தோஷம் விளக்கம்
- செவ்வாய் தோஷ விதிவிலக்கு
- காதல் திருமண ஜாதக பொருத்தம்
- 27 நட்சத்திர பொது பலன்கள்
- 27 நட்சத்திரங்கள் அதிபதி
- 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
- Read All Astrology Articles in English