பழங்கள் கனவு பலன்கள்

பழங்கள் கனவு பலன்கள் – Fruits Kanavu Palangal Tamil – இந்த பதிவில் பழங்கள் சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துகொள்வோம்.

பழங்கள் கனவு பலன்கள்

பழங்கள் கனவு பலன்கள்

பழங்கள் கனவு பலன்கள்

பழங்களை கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் தடை ஏதும் இல்லாமல் நடக்கும்.

பழங்கள் நிறைந்த செடி அல்லது மரம் உங்கள் கனவில் வந்தால் புதிய சொத்து சேர்க்கையும், புது வாரிசும் உண்டாகும் என்று பொருள்.

பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் உங்களின் சந்தோஷத்தை மற்றோரு நபரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.

பழங்களை வெட்டுவது போல் கனவு வந்தால், மனதில் உள்ள தேவை இல்லாத குழப்பங்களும், பிரச்சனைகளும் மறைய போகிறது என்று பொருள்.

நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும்.

கொய்யா பழம் கனவில் கண்டால் வீட்டில் நன்மைகள் சேரும்..

கொய்யா பழம் சாப்பிடுவது போல் கனவு வந்தால் நோய்கள் விலகும். தொழில் விருத்தி அடையும்.

பழங்கள் நிறைந்த மரம் கனவில் வந்தால் நீங்கள் தொடங்கிய செயல்களில் நல்ல பலன்கள் உண்டாகும் என்று பொருள்.

ஏலக்காயை கனவில் கண்டால் சமூகத்தில் நம்முடைய மதிப்பு அதிகரிக்கும், செல்வம் சேரும்.

ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு உண்டாகும்.

மாதுளை பழத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் மனதிற்கு விருப்பம் இல்லாத சம்பவங்கள் நடைபெற போகிறது என்று பொருள்.

பழங்களை நறுக்குவது போல் கனவு கண்டால், தேவையற்ற குழப்பங்களும், பிரச்சனைகளும் நீங்கும்.

பப்பாளி பழம் கனவில் வந்தால் சமீபத்தில் பழக்கமான அல்லது சந்திக்க இருக்கும் புதிய நபர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

சப்போட்டா பழம் கனவில் வந்தால், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குணமடைவார்கள்.

எலுமிச்சை பழம் கனவில் வந்தால் உற்றார் உறவினரிடம் நல்ல நட்பு உருவாகும்.

வாழைப்பழம் கனவில் வந்தால் தொழில் சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

ஆப்பிள் நிறைந்த மரத்தை கனவில் கண்டால் புதிய நபர்களின் வருகையை உணர்த்தும்.

மற்ற கனவு பலன்கள்

Video: அடிப்படை ஜோதிடம் கற்க | பழங்கள் கனவில் கண்டால் என்ன பலன்கள் video

You may also like...