பசு மாடு கனவு பலன்கள் – Cow Kanavu Palangl in Tamil – பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? – பொதுவாக பசு மாடு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் மனித வாழ்க்கையில் இன்றியமையாத உணவாகும். இயற்கை விவசாயி ஐயா கோ. நம்மாழ்வார் கூட நாம் பெற்ற தாயிடம் கூட 1 வருடம் பால் குடித்தோம். ஆனால் பசு மாடு பாலினை வாழ்நாள் முழுதும் குடிக்கிறோம் ஆதலால் பசு தாயை விட மேலானது என்று குறிப்பிடுகிறார்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

பசு மாடு கனவு பலன்கள்
வெள்ளை நிற பசுவை கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் நடக்க இருப்பதை குறிக்கும்.
கன்று குட்டியுடன் பசுவை கனவில் கண்டால் செல்வ வளம் பெற போவதாக அர்த்தம். வாணிபத்தில் வளர்ச்சி ஏற்படும்.
அதுவே, பசு குட்டி போடுவது போல உங்கள் கனவில் வந்தால் துன்பங்கள் வர இருப்பதை குறிக்கும்.
பசுவை வாங்குவது போல் கனவு கண்டால் அத்தகைய உங்களை சுற்றி நல்ல நட்பு வட்டாரங்களில் நல்ல மதிப்பு கிடைக்கும்.
ஒரு பசுவை நீங்கள் வெறித்தனமாக பார்ப்பது போல் கனவு கண்டால் வேலை சுமை அதிகமாகும் என்று அர்த்தம்.
அமைதியாக மாடு மேய்ப்பது போல் கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும். வெற்றி கிட்டும்.
பசுமாடு துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
அதுவே, மாட்டு மந்தையை மேய்ப்பதாக கனவு கண்டால் நல்லதல்ல, உங்களிடம் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு எதிராக திட்டம் தீட்டுவார்கள் என்று அர்த்தம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கனவில் தெரியாத ஒரு நபர் பசுவுக்கு பால் கறப்பதை போல் கண்டால், வசிக்கும் இடத்தில் பிரச்சினைகள் இருக்கும். சிலகாலம் வேறு ஊருக்கோ அல்லது கோயிலுக்கு சென்று வரலாம். அப்படியில்லையென்றால் வேறு ஊருக்கு சென்று வசிக்கலாம்.
பசு உங்களுக்கு பால் தருவது போல கனவு கண்டால், நீண்டகாலமாக விரும்பிய ஒன்றைப் பெறுவீர்கள்.
உங்கள் கனவில் மாடு தொலைந்து போவது போல கனவு வந்தால் சிரமங்களையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.
கனவில் மாடு விற்பது போல கனவு வந்தால், இழப்புகள், நஷ்டங்கள் ஏற்பட இருப்பதை குறிக்கிறது. எடுக்கும் முடிவுகளால் பண இழப்பு ஏற்படலாம். ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
நோய்வாய் பட்ட பசுவை கனவில் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை
ஒரு வளர்ச்சியற்ற பசுவை கனவில் கண்டால் செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும் மற்றும் நண்பர்களையும் குறைத்து கொள்ள வேண்டும்.
காளை மாடு கனவு பலன்கள்
காளை மாடு கனவு பலன்கள் – காளை மாடு நம்மை துரத்துவது போல கனவில் வந்தால் மரண பயம் ஏற்படும். காளை மாடு நம்மை பார்த்து சீறுவது போல் கனவு கண்டால் மற்றவர்கள் நம்மீது அதிகாரம் செலுத்த எண்ணுவார்கள். கோயில்களுக்கு சென்று வருவது நல்லது.
உங்களை காளை மாடு முட்டுவது போல கனவு கண்டால் மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
காளை மாடு உங்களை மிதிப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
குட்டி காளையை கனவில் கண்டால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
எருமை மாடு கனவு பலன்கள்
எருமை மாடு கனவு பலன்கள் – உங்களை எருமை மாடு முட்டுவது போல் கனவு வந்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களில் எச்சரிக்கை தேவை.
வீட்டினுள் எருமை மாடு நுழைவது போல கனவு கண்டால் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்களை நோக்கி எருமை முட்டுவது போல் கனவு வந்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Read More
- All Kanavu Palangal in Tamil
- காதல் கனவு பலன்கள்
- பணம் கனவு பலன்கள்
- பெண்கள் கனவு பலன்கள்
- திருமண கனவு பலன்கள்
- குழந்தை கனவு பலன்கள்
- நாய் கனவு பலன்கள்
- பாம்பு கனவு பலன்கள்
- Video – திருமண கனவு பலன்கள் | விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்கள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்