தமிழ் களஞ்சியம் | இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்

நைசர்க்ய பலம்

நைசர்க்ய பலம் – ஜாதகத்தில் ஒரு கிரகம் வலிமை அடைந்துள்ளதா மற்றும் பாவகம் வலிமை அடைந்துள்ளதா என்றான் நாம் கண்டறிவோம். ஆனால், ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் அமரும்போது எந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்.

ஜோதிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் அதில் எந்த கிரகம் வலிமை என்று நைஷர்க்ய பலம் கொண்டு ஆராய வேண்டும்.

நைசர்க்ய பலம் அட்டவணை

சனியை விட செவ்வாய் பலமானவர்
செவ்வாயை விட புதன் பலமானவர்
புதனை விட குரு பலமானவர்
குருவை விட சுக்கிரன் பலமானவர்
சுக்கிரனை விட சந்திரன் பலமானவர்
சந்திரனை விட சூரியன் பலமானவர்
சூரியனை விட ராகு பலமானவர்
ராகுவை விட கேது பலமானவர்

இந்த அடிப்படையில் பலத்தை கண்டறிந்து பலன் கூற வேண்டும்.

நைசர்க்ய பலம்

நைசர்க்ய பலம்

மேற்கூறிய உதாரண ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் என முக்கூட்டு கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன. இந்த பாவகத்தில் எந்த கிரகம் ஆதிக்கம் செலுத்தும் என்று நைஷர்க்ய பலம் விதிப்படி புதனை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சூரியனும் பலமானவர்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

சூரியன் அந்த பாவத்தை ஆதிக்கம் செலுத்துவார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை சூரியனுக்கு பதில் செவ்வாய் அங்கு இருந்தால் இங்கு கிரகயுத்தம் விதிப்படி பார்க்க வேண்டும். எந்த கிரகம் அதிக பாகையில் உள்ளதோ அதுவே அந்த பாவகத்தை ஆதிக்கம் செய்யும், குழப்பிக்கொள்ள கூடாது.

தெரிந்துகொள்க

திருஷ்டி பலம்

ஷட்பலம் என்றால் என்ன?

ஆத்மகாரகன் என்றால் என்ன?

பரிவர்த்தனை யோகம்

கிரகயுத்தம் என்றால் என்ன?

12 Zodiac Signs

You may also like...