நல்ல நட்சத்திரங்கள் எது?

நல்ல நட்சத்திரங்கள் எது?  – ஜோதிட சாஸ்திரப்படி, நன்மை தரும் நட்சத்திரங்கள், சுப நட்சத்திரங்கள் என்றும் கூடாத நட்சத்திரங்கள் தீதுறு நட்சத்திரங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நல்ல நட்சத்திரங்கள் எது
நல்ல நட்சத்திரங்கள் எது

தெரிந்து கொள்க:- கூடாத நட்சத்திரங்கள்

இந்த பதிவில் நல்ல நட்சத்திரங்கள் எது என்று பார்ப்போம். ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்கள் உள்ளன அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

அனைத்து நட்சத்திரங்களால் நமக்கு நன்மை உண்டு, இருப்பினும் சில நட்சத்திர நாட்களில் நாம் நல்ல காரியங்கள் தொடங்கலாம் என்று முன்னோர்களால் ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள்ளனர் அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிட விதிப்படி தலையற்ற நட்சத்திரங்கள், உடலற்ற நட்சத்திரங்கள், காலற்ற நட்சத்திரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நட்சத்திர காலங்களில் சுபமுகூர்த்தம் குறிப்பது, கணவன்-மனைவி கூடுவது, வெளிநாடு பயணம அல்லது வெளியூர் பயணம் போன்ற சில நல்ல விஷயங்கள் தொடங்கக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது, அவற்றை காண்போம்.

தெரிந்து கொள்க:- சுபமுகூர்த்தம் குறிப்பது | கூடாத நட்சத்திரங்கள்

தலையற்ற நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்,

உடலற்ற நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்,

காலற்ற நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

இவை இல்லாத மற்ற நட்சத்திர நாட்களில் சுப வேலைகள் தொடங்கலாம். இருப்பினும், இவை பொது விதியே சுய ஜாதகப்படி விதிவிலக்கு உண்டு அருகிலுள்ள ஜோதிடரை சென்று ஆலோசனை பெறவும்.

இயற்கையை சுப நட்சத்திரங்கள்

அஸ்வினி, ரோகினி, பூசம், அஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகியவை சுப காரியங்கள் செய்ய உகந்த சுப நட்சத்திரங்கள் ஆகும். பஞ்சாங்கம் பார்த்து முகூர்த்தம் குறிப்பவர்கள் அல்லது புதிய முயற்சியை தொடங்க நல்ல நாள் பார்ப்பவர்கள் இந்த நட்சத்திரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

தாரபலம் பார்த்து நல்ல காரியங்கள் செய்யலாம்

பொதுவாக நல்ல காரியங்கள் தொடங்க ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நாள்(சுப காரியங்கள் தொடங்கும் நாள்) தாரபலம் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தாராபலம் உள்ள நட்சத்திரங்கள் நல்ல நட்சத்திரம் ஆகும். .அந்த நாட்களில் நல்ல விஷயங்கள் தொடங்குவது நல்லது.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்