நல்ல சுப திதி எவை

நல்ல காரியங்களுக்கான சுப திதிசுப திதி என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது மேலும் நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற சுப திதிகள் எவை என்று தெரிந்து கொள்வோம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். சூரியனும் சந்திரனும் இணைந்திருப்பது அமாவாசை ஆகும். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி சென்று எதிர் ராசியில்(7ஆம் ராசியில்) இருப்பது பௌர்ணமி அமைப்பு ஆகும்.

நல்ல காரியங்களுக்கான சுப திதி
நல்ல காரியங்களுக்கான சுப திதி

இவையே வளர்பிறை மற்றும் தேய்பிறை அமைப்பு ஆகும். இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

பொதுவாக நல்ல காரியங்கள் தொடங்க அனைவரும் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் நல்ல நேரம் குறிப்பது வழக்கம். அவ்வாறு பார்க்கும் பஞ்சாங்கம் என்பது கிழமை(வாரம்), நட்சத்திரம், திதி, கரணம், யோகம் என 5 அங்கங்களை கொண்டது ஆகும். இவை அனைத்தும் நல்ல விதமாக அமையும் நந்நாளில் சுப லக்கினமும் கணக்கிட்டு நல்ல காரியங்களை தொடங்க வேண்டும்.

அதில் சுப திதிகள் எவை எவை என்று இந்த பதிவில் பார்ப்போம்?

சுப திதிகள் – துவிதியை, திருதியை, பஞ்சமி, ஏகாதசி, திரயோதசி மற்றும் சதுர்த்தசி ஆகியவை சுப திதிகள்.

மத்திமமான திதிகள் – சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி ஆகிய திதிகள் மத்திமம்.

அசுப திதிகள் – பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய திதிகள் அசுப திதிகள் என்றும் இந்த திதிகளில் விசேஷங்கள் ஏதும் ஒதுக்க வேண்டும் என்றும் இறைவழிபாடு செய்வது சிறப்பு என்றும் முன்னோரிகள் வழிவகுத்துள்ளனர்.

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்