தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்றால் என்ன? – முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் காலத்தை வெளிப்படையாக அறிவிக்கும் சொற்களைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் என்கிறோம். காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு வினைமுற்றுகள்

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

தெரிநிலை வினைமுற்று

வந்தாய் என்பது இறந்தகாலம் காட்டுகிறது.
வருகிறாய் என்பது நிகழ்காலம் காட்டுகிறது.
வருவாய் என்பது எதிர்காலம் காட்டுகிறது.

இச்சொற்களில் ‘வா’ என்னும் வினைப்பகுதிக்கும் ‘ஆய்’ என்னும் முன்னிலை ஒருமை விகுதிக்கும் இடையில் காலம் காட்டும் இடைநிலைகள் உள்ளன. முறையே த், கிறு, வ் என்பன மூன்று காலங்களையும் உணர்த்துகின்றன.

முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகளாக இ, ஐ, ஆய் என்பன உள்ளன. இவற்றுள் ஆய் என்னும் விகுதியே இக்காலத்தில் பெருவழக்காக உள்ளது.

நீ படித்தாய் ஓடினாய்
நீ நடந்தாய் உழுதாய்
நீ உண்டாய் சொன்னாய்
நீ சென்றாய் வந்தாய்

முதலிய சொற்களில் எல்லாம் ‘ஆய்’ விகுதி இருப்பதை அறிக. இவற்றைப் போல, பழங்காலத்தில் இகர விகுதியும் பயன்பட்டுள்ளது. ஒரு சான்று:

சென்றி என்பது இறந்தகாலம் உணர்த்தும் வினைமுற்று. இதற்குச் சென்றாய் என்று பொருள்.

செல்லாநின்றி என்பது நிகழ்காலம் உணர்த்துகிறது. ‘செல்’ என்னும் பகுதியோடு ஆநின்று என்னும் நிகழ்கால இடைநிலையும் ‘’கர விகுதியும் சேர்ந்துள்ளது. எனவே, இச்சொல் செல்கிறாய் என்னும் பொருளுடையதாகும்.

சேறி என்னும் தெரிநிலை வினைமுற்று ‘செல்வாய்’ என்னும் பொருளுடையது. இது எதிர்காலம் உணர்த்துவது. சென்றி, சொல்லாநின்றி, சேறி ஆகிய தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆதலால் இவற்றின் பொருள்களை நினைவிற்கொள்ள வேண்டும். இகர விகுதியைப் போல் ‘’கார விகுதியும் முன்னிலையில் வரும்.

உண்டனை என்பது இதற்குச் சான்று. இது உண்டாய் என்னும் பொருளுடையது. இதுபோல் நிகழ்காலம் குறிப்பதாக இவ்விகுதி உண்கின்றனை என்று வருவதும் காண்க.

இதுவரை கூறியவற்றால் ஐ, ஆய், இ என்னும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் வருகின்றன என்பது தெளிவாகும்.

குறிப்பு வினைமுற்று

காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு வினைமுற்றுகள் ஐ, ஆய், இ எனும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் விகுதிகளாக வருகின்றன.

நீ நல்லாய் – ஆய் விகுதி
நீ நல்லை – ஐ விகுதி
நீ அருளி – இ விகுதி

இவை முன்னிலை
ஒருமையில் ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, அஃறிணை ஒன்றன்பால் ஆகிய மூன்றையும் குறிக்கும்.

‘நல்லை’ என்னும் சொல் முன்னிலையில் இருக்கும் ஆண் ஒருவரையோ, பெண் ஒருவரையோ, அல்லது அஃறிணைப் பொருள் ஒன்றையோ குறித்துப் பேசுவதாக அமையும். நீ நல்ல இயல்பை உடையாய் எனும் பொருள் தருவதாக ‘நல்லை’ என்னும் சொல் குறிப்பு வினையில் பயன்படுகிறது. ‘அருளி’ என்பது ‘அருள் உடையவன் நீ’ என்று பொருள்படும்.

ஓர் ஆணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு பெண்ணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.
ஒரு நாய் போன்ற அஃறிணை உயிரைப் பார்த்தும் இவ்வாறு கூறலாம்.
குறிப்பு வினை இம் மூன்றற்கும் உரியது.

மேற்கண்டவற்றால் தெரிநிலை வினை, குறிப்பு வினை எனும் இரண்டிற்கும் முன்னிலை ஒருமைக்குரிய விகுதிகளாக ஐ, ஆய், இ எனும் மூன்றும் வருகின்றன என்பது விளங்கும். இவற்றுள் ஆய் விகுதி இன்றைய வழக்கில் உள்ளது என்பதும், ஐ, இ ஆகிய விகுதிகள் முற்கால வழக்குகள் என்பதும் நினைவிற்கு உரியன.

தெரிந்து கொள்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்