Skip to content
Home » ஜோதிடம் » தீதுறு நட்சத்திரங்கள்

தீதுறு நட்சத்திரங்கள்

தீதுறு நட்சத்திரங்கள் – சேரக்கூடாத நட்சத்திரங்கள் மற்றும் சுப நட்சத்திரங்கள் – எந்தெந்த நட்சத்திர நாட்களில் கடன் வாங்கலாம் அல்லது வாங்க கூடாது, மருத்துவ சிகிச்சை செய்யலாம் அல்லது செய்யக்கூடாது. கடன் கொடுக்கலாம் அல்லது கொடுக்கக்கூடாது மேலும் சுப காரியங்களுக்கு ஏற்ற சுப நட்சித்திர நாட்கள் மற்றும் கூடாத நட்சத்திர நாட்கள் எவை என்று அறிந்து கொள்ளலாம்.

தீதுறு நட்சத்திரங்கள்
தீதுறு நட்சத்திரங்கள்/சேரக்கூடாத நட்சத்திரங்கள்

தீதுறு நட்சத்திரங்கள்/சேரக்கூடாத நட்சத்திரங்கள் பாடல்

ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யமுப்பூரம் கேட்டை
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறில்
மாதனங்கொண்டார் தாரார் வழிநடை போனார் மீளார்
பாயினில் படுத்தார் தேறார் பாம்பின்வாய் தேரைதானே.

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

மேற்கண்ட பாடல் பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களை தீதுறு நட்சத்திரங்கள்(கூடாத நட்சத்திரங்கள்) என்றும், பாம்பின் வாயினில் அகப்பட்ட தேரைபோல ஜாதகர் மாட்டிக் கொள்வார் என்று எச்சரிக்கை செய்கிறது.

அதேநேரத்தில் இந்த 12 நட்சத்திரங்களில் மகம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களை சுபநிகழ்வுகள் நடத்துவதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற ஒன்பது நட்சத்திரங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

இந்த நட்சத்திர நாட்களில் கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும் கூடாது, நீண்ட தூர பயணம் ஆகாது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல் கூடாது. இந்த நட்சத்திரங்களில் கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாது. கடன் கொடுத்தவர் பணத்தை திரும்ப பெறுவதும் கடினம்.

இந்த நட்சத்திர நாட்களில் பயணம் செய்தவர் வெற்றியுடன் திரும்புவதும், மருத்துவ சிகிச்சை வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படும்.

சுப நட்சத்திரங்கள்

அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் சுப நட்சத்திரங்கள் என கூறுகிறது.

இந்த நட்சத்திர நாட்களில் சுப வேலைகளை தொடங்கலாம். திருமண முகூர்த்தம் குறித்தல், குழந்தைக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்றவற்றை செய்யலாம்.

இந்த நாட்களில் கடன் வாங்குவதும், கடன் கொடுப்பதும் செய்யலாம், பயமின்றி பயனங்கள் மேற்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சைகள் செய்துகொள்ளலாம். இந்த நட்சத்திரங்களில் கடன் பெற்றவர் திருப்பித்தர இயலும்.

Read More: 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்