தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்

தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம்
Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

தமிழ் இலக்கணம் – சொல்லதிகாரம் – திணை மற்றும் பால்

சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

திணை மற்றும் பால்

திணை

1. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும்.

திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப் பெயர், ஆகு பெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி.

2. உயர்தணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம்.

3. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர், முதலிய உயிரல்லாத சாதிப் பொருள்களுமாம்.

பால்

4. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.

உதாரணம்.

அவன், வந்தான் – உயர்திணையாண்பால்
அவள், வந்தாள் – உயர்திணைப் பெண்பால்
அவர், வந்தார் – உயர்திணைப் பலர்பால்

5. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.

உதாரணம்.

அது, வந்தது – அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன – அஃறிணைப் பலர்பால்

இடம்

6. இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.

7. பேசும் பொருள் தன்மையிடம்: பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்: பேசப்படும் பொருள் படர்க்கையிடம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்