Skip to content
Home » ஜோதிடம் » தாராபலம் என்றால் என்ன?

தாராபலம் என்றால் என்ன?

தாராபலம்தாராபலம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது? மற்றும் தாரை வகைகள் என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம். தாராபலம் என்றால் நட்சத்திரங்களின் குறியீடாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் நின்ற நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் ஆகும். தாராபலம் நட்சத்திரம் என்பது ஜென்ம நட்சத்திரத்திற்கு உகந்த நட்சித்திறன்கள் நன்மை செய்யக்கூடியவை.

தாரா பலம் என்றால் என்ன
தாரா பலம் என்றால் என்ன

ஒரு ஜாதகரின் தொழில், வியாபாரம், தொடங்கும் புதிய முயற்சிகள் மற்றும் செய்ய இருக்கும் சுப நிகழ்வுகள் மற்றும் ஜாதகரின் சாதகமான நாட்கள் தாராபலம் உள்ள நட்சத்திர தினத்தில் செய்தால் நன்றாக இருக்கும்.

தாராபலம் கண்டறிவது எப்படி?

ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 0,2,4,6,8 என வந்தால் தாரா பலமுடைய நட்சத்திரமாகும். அன்றைய தின நட்சத்திரம் 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க மீதி 0,2,4,6,8 வர தாராபலம் உண்டு என்று பொருள். திருமணத்திற்கு சுபமுகூர்த்தம் குறிக்கும்போது தாரா பலமுடைய நட்சத்திர நாளாக இருக்க வேண்டும்.

அதேபோல, 1,3,5,7 ஆக வரும் நட்சத்திரம் மற்றும் 9க்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் 9ஆல் வகுக்க 1,3,5,7 என வந்தால் தாரா பலம் இல்லை என்று பொருள். அதாவது இந்த நாட்களில் சுப பலன்கள் தராது.

எந்த தாரை வகைகள்  என்ன என்று தெரிந்துகொள்வோம்.

எண் 1 – ஜென்ம தாரை பலம்– தொழில் துவங்க ஏற்றது இல்லை

எண் 2 – சம்பத் தாரை பலம்– தனவரவு உண்டாகும். நற்காரியங்கள் செய்யலாம்.

எண் 3 – விபத் தாரை பலம்– இந்த நட்சத்திர நாளில் பயணங்களை தவிர்ப்பது நல்லது

எண் 4 – ஷேம தாரை பலம்– மிகவும் நன்மை தரக்கூடியது.

எண் 5 – பிரத்யக் தாரை பலம்– வீண் அலைச்சல், மனக் குழப்பம் ஏற்படும்.

எண் 6 – சாதக தாரை பலம்– புதிய முயற்சிகளுக்கு சாதகமானது, எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

எண் 7 – வதை தாரை பலம்– கடுமையான தீமை தரக்கூடியது, வாக்கு வாதங்கள் ஏற்படும்.

எண் 8 – மைத்ர தாரை பலம்– புதிய முயற்சி வெற்றி அடையும்

எண் 9 – பரம மைத்ர தாரை பலம்– அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள்.

உதாரணம்: ஜென்ம நட்சத்திரம் கிருத்திகை என்று வைத்து கொள்ளுங்கள் அன்றைய
நட்சத்திரம் சுவாதி என்றிருந்தால் கிருத்திகை முதல் சுவாதி 13வது நட்சத்திரமாக வரும் 9ல் வகுக்க மீதி 4 வரும், இது சம்பத் தாரா பலமுடைய நட்சத்திரம் நன்மையை தரும். இது போல மற்ற நட்சத்திர பலன்களை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்