தமிழக கலை: மலைக்கோயில்கள்

தமிழக கலை
தமிழக கலை
Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

மலைமேல் கற்கோயில்கள்

தமிழகத்தில் உள்ள பெரிய மலைகளின் மேல் தடங்களிலும், பக்கவாட்டுகளிலும் கோயில்கள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத்தக்கவை கொல்லிமலை – அரப்பளீஸ்வரர் கோயில், திரு ஈங்கோய்மலை – சிவன்கோயில், திருச்செங்கோடு – அர்த்த நாரீஸ்வரர் கோயில், மேலை மலை – கண்ணகி கோட்டம் (தேனீ கம்பம்), திருப்பரங்குன்றம் முருகன் குடைவரை கோயில்கள் ஆகும்.

மலைமேல் குன்று கோயில்கள்

குன்றின் மீது கட்டப்பட்ட கோயில்கள், பல்லவ காலத்தில் எழுப்பப்பட்ட திருச்சிராப்பள்ளி சிவன் கோயில், விராலிமலை, சிவாயமலை, பிரான்மலை, உய்யக்கொண்டான் திருமலை, பழநி மலை, கழுகு மலை, திருக்கழுக்குன்றம், வள்ளிமலை, எறும்பியூர்மலை ஆகிய குன்றுகளில் சேர, சோழ, பாண்டிய மற்றும் நாயக்கர் மன்னர்களின் ஆட்சி காலத்தில் மலை மீது குன்றுகளில் கட்டப்பட்டவை.

திருச்சிராப்பள்ளி மலை மீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் என்னும் செவ்வந்தி நாதர் சிவன் கோயில் தேவார பாடல் பாடப்பட்ட தலமாகும். இக்கோயில் கரடுமுரடான உலகிலேயே மிகவும் பழமையான பாறைகளை திட்டமான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த கோயிலாகும்.

இதே போன்று, திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் உயர்தளத்தில் கொற்றவை எனும் காளி, முருக பெருமான், விநாயக பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தனியே பாறையை குடைந்து சந்நதி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்