சர ராசிகள் மற்றும் சர லக்னம்
இந்த பதிவில் சர ராசிகள் அல்லது சர லக்னம் என்றால் என்ன? சர ராசி பாதகாதிபதி மற்றும் யார் என்று தெரிந்துகொள்வோம்.

சர ராசிகள் மற்றும் சர லக்னம்
கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 1,4,7,10 வீட்டு ராசிகள் அல்லது லக்னம் சர ராசி மற்றும் சர லக்னம் ஆகும். அதன்படி, மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
சர ராசிகளின் தன்மைகள்
‘சரம்’ என்றால் ‘எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருப்பது’ என்று பொருள். ‘சரம்’ என்பது நகரும் தன்மையை குறிப்பதால் இடமாற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி வீட்டிலும் பொருட்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் மிகவும் கெட்டிக்காரராக இருப்பார்கள். மற்றவர்கள் செய்து முடிக்கும் வேலையை அவர்களுக்கு முன்னரே வெகு விரைவாக முடித்துவிடுவார்கள். பாடம் கற்றுக்கொள்வது அல்லது ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள விரும்பினால் அதனை மற்றவர்களை விட சீக்கிரமாக கற்றுக்கொள்வார்கள்.
இவர்கள் ஒரு இடத்தில் நிலையாக அமர மாட்டார்கள். எங்கேயாவது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். பிரயாணங்கள் ரொம்ப பிடிக்கும்.
எண்ணம் சீராக இருந்தாலும் செயல்படுத்த முடியாத தன்மை, அவசர அவசரமாக முடிவு எடுத்து மாட்டிக்கொள்வது, பின்பு எடுத்த முடிவுக்காக வருந்துவது ஆகியவற்றை குறிக்கும்.
4-ம் வீட்டு அதிபதி அல்லது 4-ல் நின்ற கிரகம், சர ராசியாக இருந்தால் அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருப்பார்கள்.
தெரிந்து கொள்க:- 27 நட்சத்திர பொது பலன்கள் | 27 நட்சத்திரங்கள் அதிபதி
சர ராசி மற்றும் சர லக்னம் பாதகாதிபதி
சர ராசி மற்றும் லக்னம் பாதகாதிபதி அவர்களுடைய ராசி அல்லது லக்கினத்தின் 11ஆம் வீடு அதிபதி ஆவார்கள். உதாரணமாக மேஷ ராசி என வைத்துக்கொள்வோம். மேஷத்தின் 11ஆம் வீடு கும்பம் ஆகும். கும்பத்தின் அதிபதி சனி ஆவார். எனவே மேஷத்தின் பாதகாதிபதி சனி ஆவார்.
மேஷ ராசியின் பாதகாதிபதி சனி ஆவார்.
கடக ராசியின் பாதகாதிபதி சுக்கிரன் ஆவார்.
துலாம் ராசியின் பாதகாதிபதி சூரியன் ஆவார்.
மகர ராசியின் பாதகாதிபதி செவ்வாய் ஆவார்.
அனைத்து ராசிகளுக்கும் 2,7ஆம் வீட்டின் அதிபதிகள் மாரகாதிபதி ஆவார்கள்.
Read More
- திருமண பொருத்தம்
- Star Matching Table for Marriage in Tamil
- சனி தோஷம் விளக்கம்
- செவ்வாய் தோஷ விதிவிலக்கு
- காதல் திருமண ஜாதக பொருத்தம்
- 27 நட்சத்திர பொது பலன்கள்
- 27 நட்சத்திரங்கள் அதிபதி
- 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- Read All Astrology Articles in English