சமையலறை வாஸ்து குறிப்புகள் – கிச்சன் வாஸ்து (Kitchen Room Vastu in Tamil) – நாம் அன்றாடம் பயன்படுத்தும் கிச்சன், வாஸ்து சாஸ்திரபடி எப்படி அமைக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
![சமையலறை அமைக்க வாஸ்து](https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/09/சமையலறை-அமைக்க-வாஸ்து-குறிப்புகள்.jpg)
நாம் உயிர் வாழ உண்ணும் உணவிலிருந்து அதிகப்படியான ஆற்றல் பெறப்படுகிறது. அவ்வாறு உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் இடம் சமையலறை வீட்டில் சரியான பகுதியில் அமைத்தல் சிறந்தது.
தென்கிழக்கு பகுதியே அக்னி என்பதால் சமயலறை அமைக்க மிகவும் ஏற்ற இடமாகும். சகல சம்பத்தும் விருத்தியாகும்.
தென்கிழக்கு திசையில் சமையலறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கு திசையில் சமையலறை அமைப்பது சிறப்பை தரும். பொன், பொருள் சேர்க்கை, தனலாபம் உண்டாகும்.
ஈசானியம் திசை நீர் சம்பந்தப்பட்ட திசை என்பதால் நெருப்பு சம்பந்தமான சமையலறையை அங்கே அமைக்க கூடாது. ஈசானிய பகுதியில் சமையலறை அமைத்தால் பொருளாதார சீர்குலைவு அல்லது பாதிப்பு உண்டாகும்.
தென்மேற்கு பகுதி பெண்களின் சந்தோஷத்தையும் உடல்நலத்தையும் கெடுக்கும் என்பதால் தென்மேற்கு திசையில் அமைக்க கூடாது. மேலும் தென்மேற்கு பகுதியில் சமையலறை அமைத்தால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
சாப்பாட்டு அறை – உணவு உண்ணும் அறை
உணவு உண்ணும் அறையை(சாப்பாட்டு அறை) வீட்டின் தெற்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
சாப்பாட்டு மேஜை () வீட்டின் தெற்கு சுவரை ஒட்டினாற்போல் அமைப்பது உத்தமம்.
அதேசமயம் சாப்பிடுபவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. மற்ற திசைகள் ஓரளவுக்கு நன்று.
தெரிந்துகொள்க
- All Vastu Details in Tamil
- ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
- மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
- படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
- வரவேற்பு அறை வாஸ்து
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்