Skip to content
Home » ஜோதிடம் » சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

sani peyarchi

சனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம்.

மேஷம்

உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவராகவும், எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் மன தைரியமும் வீரமும் விவேகமும் உடையவர்கள்.

உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் பலவித மனக்கஷ்டங்களையும், துன்பங்களையும் செய்திருப்பார். செய்தொழில் நஷ்டம், கடன் பிரச்சனைகள், மனகுழப்பங்கள், அவமானங்கள் தந்திருப்பார். இதனால் வீட்டிலும் சமுதாயத்திலும் பல இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள்.

கவலை வேண்டாம், இப்போது நடைபெரும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பலனையே வழங்குவார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில், தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன்களையே தரும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டுபண்ணுவார்.

இனிமேல் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடனை அடைத்து விடுவீர்கள். கடன் தொகைகள் வசூலாகும்.
வியாபாரத்தில் புது வியாபார யுக்தியை கையாளுவீர்கள். முடங்கி கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பலனையே தரும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்ர பகவானாவார். பணப் புழக்கத்தையும், சௌபாக்கியத்தையும், நல்ல கல்வியையும் அள்ளிக்கொடுக்கும் கிரகம் சுக்ர பகவான். உங்களது ராசிக்கு இதுவரையிலும் இதுவரை 7ம் வீட்டில் கண்டச்சனியாக இருந்தவர் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலனையே தரும்.

உங்கள் ராசி அதிபதி சுக்ர பகவான் சனி பகவானுக்கு நட்பு கிரகம் என்பதால் கெடுப்பலனில் சற்று வீரியம் குறையலாம். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு செயலையும் கவனித்து தான் செய்ய வேண்டும்.

சனி பகவான் 8ல் சஞ்சாரம் செய்வதால், காரியத்தில் தடையை ஏற்படுத்துவார். ஆகையால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை இருப்பது நல்லது. உணர்ச்சி வசபடுதல் கூடாது. நிதானமாக சிந்தித்து செயல் பட வேண்டும். சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுப்பதை நிறுத்திவிட்டு, பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இருக்காது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

இந்த சனிப்பெயர்ச்சில் சிந்தித்து செயல்பட வேண்டும். தெய்வம் தொழுவது சிறந்தது.

மிதுனம்

புத்திக்கும், ஞானத்துக்கும் அதிபதியான புதன் பகவான் உங்களுக்கு ராசி அதிபதி ஆவார். இதுவரை 6ம் இடத்தில் இருந்த சனி பகவான் இனி 7ம் இடத்தில் கணடச்சனியாக பெயர்ச்சி ஆகிறார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, கடன் இவைகள் இல்லாமல் இல்லை.

7ம் இடம் சற்று சுமாரான பலனையே தருவார். கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமையை குறைக்க அடிக்கடி ஆன்மிக பயணம் செய்ய வேண்டும். செயல்களில் தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ பலத்துடன் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும்.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். குடும்ப பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

இருப்பினும், கடன் வாங்கி வியாபாரம் தொடங்க வேண்டாம். கடன் தருவதை தவிர்க்கவும். சிலருக்கு கூட்டுத்தொழில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படலாம். வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

இந்த சனிப்பெயர்ச்சி சுமாரான பலனையே தரும். உடல் நலம் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கடகம்

சந்திர பகவானை அதிபதியாக கொண்டவர்கள் நீங்கள். அனைவரிடமும் நயமாக பழகும் இயல்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும், ஆர்வமும், திறமையும் உடையவர்கள். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

6ம் இடத்தில் பொழுது, நிலுவையில் இருந்த பணம் மற்றும் பொருள்கள் திரும்ப வந்து சேரும். எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப ஊதிய உயர்வும் ஏற்படும். கௌரவம், புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் வந்து சேரும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பலனையே தரும்.

சிம்மம்

பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் நன்மைக்காக எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை, ஆட்சி, அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உடையவர். எளிதாக விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் மந்தமாக இருந்தாலும் கெடுபலன்கள் இருக்காது என்பதை திட்டவட்டமாக சொல்லலாம். இருப்பினும் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. கண்ணில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் நெடுநாள் பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெறம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

வியாபாரிகளுக்கு பணவரவு இருக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்களால் லாபம் உண்டாகும். நெடுநாட்களாக வராமலிருக்கும் பணம் இனி கைக்கு வந்து சேரும். சூதாட்டங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நல்ல அறிவும் ஆற்றலும் சிந்திக்கும் குணமும் கொண்ட நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.

பொதுவாக இப்பெயர்ச்சி நற்பலனையே தரும்.

கன்னி

புத பகவான் உங்கள் ராசி அதிபதி ஆதலால், எந்த காரியத்தையும் பல முறை யோசித்து விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். நீங்கள் தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள்.

4ம் இடத்தில் சஞ்சாரம் செய்து அர்த்தாஷ்டமச் சனியாக பெயர்ச்சி ஆகிறார். குடும்பத்தில் தம்பதியினரிடையே விட்டுக்கொடுத்து செல்லுதல் நல்லது. மருத்துவ செலவு ஏற்படக்கூடும். சொத்துக்களில் சிக்கல் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை.

எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் கிடைத்த வேலையை சிறப்பாக பணியாற்றவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேளையில் மேலதிகாரிகளிடம் பணிந்து செல்லுதல் நல்லது. இருப்பினும் ஊதிய உயர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். அதிக வேலை செய்தலும் குறைந்த சம்பளமே கிடைக்கும் சூழ்நிலை இது.

இறைநம்பிக்கையுடன் இருந்தால் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி சுமாரான பலனையே தரும்.

துலாம்

கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.

இது வரையில், 2ம் இடத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர்களையும், வேதனைகளையும், விரயங்களையும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். இப்பெயர்ச்சி பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.

முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். அதே சமயம் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். தம்பதியினரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தையாரின் ஆதரவு கிடைக்கும். இக்கால கட்டங்களில் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது.

சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன்களைப் பற்றிய கவலை நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும்.

பொதுவாக இந்த பெயர்ச்சி நன்மையை தரும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாக கொண்டவர்கள் நீங்கள். என்றும், நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், தலைமை ஏற்று நடத்தும் திறனும் கொண்டவர்.

இதுவரை ஜென்ம சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களையும், உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் ஏற்படுத்தி வந்தார். இனி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கு வருவது சற்று பரவாயில்லை.

2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், புகழ், காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இதுநாள் வரை ஏற்பட்ட கவலை, வேதனை, அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்கை அமையும். மேலும் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும் வரவும் கிட்டும்.

இனிமேல், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பயம் விலகும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடும், எளிய உடற்பயிற்சியும் அவசியம். வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல மதிப்பை பெற்று தரும்.

தனுசு

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ அனுகூலத்தையும் பெற்றவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள்.

இதுவரை 12ம் இடத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக ராசிக்குள் சஞ்சாரம் செய்ய உள்ளார். எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் தடைகள் இருந்தாலும் இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். இக்காலகட்டத்தில் தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும்.

ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் ஊதியம் கிடைப்பதில் தடை, கல்வியில் தடை, வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். குழப்பத்தை தவிர்த்து சிந்தித்து செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள் ஏற்படும், அதனை தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம்.

வியாபாரத்தில் மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம் பின் ஏமாற்றப்படுவீர்கள்.

பொதுவாக இந்த பெயர்ச்சி மந்தமான நிலையே காட்டும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். நீங்கள், மனதில் உறுதியும், நேர்மையும், கொண்டவர்கள். ஒரு செயலை தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.

உங்களுக்கு அலைச்சல் அதிகமாகும், இடமாற்றம் ஏற்படும், குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உண்டு.

தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் தேவையற்ற விரையங்கள் மூலம் சேமிப்பு இருக்காது. காரியங்களில் தடை ஏற்பட்டாலும் முடிவில் சுபமாகும். சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

தொழில் ரீதியாக தேவையற்ற பொறாமைகளை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

வியாபாரத்தில் ஓரளவு பணம் சம்பாதிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தவிர்க்கவும்.

பொதுவாக இந்த பெயர்ச்சி சுமாரான பலனையே தரும்.

கும்பம்

சனி பகவான் உங்கள் ராசி அதிபதியவர். நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசிகரிக்கும் ஆற்றலும் உடையவராக இருப்பீர்கள். ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மற்றவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டீர்கள்.

உங்கள் ராசிக்கு, 11ம் இடத்தில் சஞ்சாரம் சனிப்பெயர்ச்சி செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம், புகழ், அதிகரிக்கும், பேச்சிலும் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும்.

சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து இனிமேல் பணப்புழக்கம் தாரளமாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் விட்டு பிரியலாம். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் அமையும். குழந்தைகளால் தேவையற்ற வேதனைகள் ஏற்படும். ஆலய தரிசனம் நற்பலனை தரும்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.

மீனம்

மீன ராசிக்கு அதிபதி கிரகம் குரு பகவான் ஆவார். தெய்வத்திற்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர் நீங்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பும் உடையவர்கள்.

10ம் இடமான தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். புகழ் அந்தஸ்து சற்று கூடும். இந்த கால கட்டத்தில், எந்த செயலையும் அவசரப்படாமல் எதிலும் சற்று நிதானித்துச் செயல்படுங்கள். விரையச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது அதனை கட்டுப்படுத்தவும். வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கை தேவை. யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். வீடு, வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி, அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.
கடன் வாங்க வேண்டியது வரும். அப்படி கடன் வாங்கும்பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

திருமண தடை நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம் தீரும்.ழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்கும். எதிர்காலத்தை எண்ணி சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசாங்க காரியங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். மேலும், 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

பொதுவாக இந்த பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலனையே தருகிறது.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்