உவம உருபு இடைச்சொற்கள்

உவம உருபு இடைச்சொற்கள் – உவம உருபு இடைச்சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.

இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.

அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமும் சாரியை.

உவம உருபு இடைச்சொற்கள் – தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்

பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.

ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம் உண்டே கடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.
பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.
எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.
இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.
ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வு சிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.

(உதாரணம்)

ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை
வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என
வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு
இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு
எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.
கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் – கழிந்ததற்கிரங்குதல்
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை
அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.

உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.

எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.

உதாரணம்.

எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்
தருதலால் எதிர்மறை
உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு.
இழிவு சிறப்பு புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம்.
ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம்.
எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம். இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம்.
முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று.
எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;.
தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.

எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்ச உம்மை ஆகும்.

உதாரணம்.
எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.

இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்ச உம்மை ஆயிற்று.

எச்ச உம்மையால் தழுவப்படம் பொருட்சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச உம்மையோடு கூடிய சொல்லிற்கு முதலிலே சொல்லப்படும்.

உதாரணம்.
சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.
இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்

என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழுபொருளிலும் வரும்.

உதாரணம்.
வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.
பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது.
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது.
பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.
குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.
இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.
உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க

மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.

உதாரணம்.
நிலலென்ற நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத் தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு

பெயர்ச்சொல் என்னும், எண்ணிடைச் சொற்கள் ஏழினுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்.

பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.

(உதாரணம்)

செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தார்.
ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.
என்றாவெண் சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும் வந்தார்.
எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும் வந்தார்.
உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார்.
என்றெண் சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர்.
எனவென் சாத்தனெனக் கொற்றனெனன விருவருளர்.
ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.
உம்மையெண் சாத்தனுங் கொற்றனும்; வந்தார்.
என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென் றாகிய வுலகம்.
எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய உலகம்.
ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய வுலகம்.

என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும்.

உதாரணம்.

என்றெண் வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.
எனவெண் பகைபாவ மச்சம் பழியென நான்கு – மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது..
ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து – மிருடீர வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.

வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகை பெறுதலில்லை.

உதாரணம்.

உம்மையெண் – கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான்
என்றென் – உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்
எனவெண் – உண்ணவென வுடுக்கவென வந்தான்
செவ்வென் – கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான்
பிரிந்து கூடு மென் – உண்ண வுடுக்கவென்று வநதான்

அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

உதாரணம்.
அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்

கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையும் தரும்.

உதாரணம்.

ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.
அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.

(உ-ம்)

வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது. இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.
பிறிது ஊளிற் பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.
அதற்கினமாகிய பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால் பிறிதென்னும் பொருளில் வந்தது.
அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை

மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து பொருளையும் தலுஷரும்.

உதாரணம்.

ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை
ஆக்கம் பண்டு காடுமன் இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம்
கழிவு சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.
மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி
அசைநிலை அதுமற் கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெருமையும் ஆகிய நான்கு பொருளையும் தரும்.

உதாரணம்.

அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம்.
பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.
காலம் கொன்வரல் வடை இங்கே காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்
பெருமை கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற் பெருமை

அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.

உதாரணம்.

ஆங்கு வருமே – சேயிழை யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு.
அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

மன்ற என்னும் இடைச்சொல், தெளிவுப் பொருளைத் தரும்.

உதாரணம்.

தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.

அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.

உரையசை – கட்டுரைக்கண் வரும் அசை நிலை
ஒன்று சொல்வேன் கேள் – அம்ம வாழி ’’தோழி“
உரையசை – ’’ அது மற்றம்ம’’

ஆங்க என்னும் இடைச் சொல், உரையசைப் பொருளில் வரும்.

உதாரணம்.
உரையசை – ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’

ஆர் என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.

உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.

(உதாரணம்)

உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார். தந்நையார் வந்தார்.
அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக உம்ம{ற்று வினைமுன் வந்தது.

தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.

உதாரணம்.

இடப்பன்மை – சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம்
தொழிற்பயில்வு – படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

உதாரணம்.

காலவெல்லை – இனி வருவேன்
இடவெல்லை – இனியெம்மூர்

முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.

உதாரணம்.

காலம் – முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் – முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும் வழங்கும்.

வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

உதாரணம்.
வளா விருந்தான், சும்மா வந்தான்

ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.

விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.

உதாரணம்.

ஆவது – தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் – சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் – வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்
தான் – பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா

அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

இசைநிறை

ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.

அசைநிலை

மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.

மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.

யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.

Read More

தன்மை வினைமுற்று

முற்று வினை என்றால் என்ன

இடவேற்றுமை பெயர்கள்

வேற்றுமை உருபு

Read More: 12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...