உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் உபய ராசிகள் உபய லக்னம் எவை? உபய ராசி பாதகாதிபதி யார்? என்று தெளிவாக பார்ப்போம்.

உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்
உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்

கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 3,6,9,12ஆம் வீட்டு ராசிகள் உபய ராசிகள் மற்றும் உபய லக்னம் ஆகும். அதன்படி, மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.

உபய ராசிகளின் தன்மைகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். ‘உபயம்’ என்றால் ‘இரட்டைத்தன்மை’ என்று பொருள். இவர்கள் எப்பொழுதும் இரட்டைத்தன்மையுடன் இருப்பார்கள். இவர்களின் குணத்தை கண்டறிவது என்பது எளிதானது அல்ல ரொம்ப நெருக்கமாக பழகியவர்களுக்கு மட்டுமே இவர்களை அறிந்துகொள்ள முடியும்.

உபய ராசி காரர்கள் முடிவு எடுப்பதில் சிரமப்படுவார்கள். தெளிவாக யோசித்தாலும் அடிக்கடி எண்ணத்தை மாற்றக் கூடியவர்கள் ஆதலால் எந்த விஷயத்திலும் தெளிவாக முடிவு எடுக்க முடியாது.

வண்டி, வாகனம், மற்ற அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் இவர்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு போவார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கும் போவார்கள்.

தெரிந்து கொள்க:- 27 நட்சத்திர பொது பலன்கள்27 நட்சத்திரங்கள் அதிபதி

உபய ராசிகள் உபய லக்னம் பாதகாதிபதி

உபய ராசி மற்றும் உபய லக்னம் பாதகாதிபதி அவர்களுடைய உபய ராசியின் 7ஆம் வீட்டு அதிபதி ஆவார். உதாரணமாக மிதுன ராசி என வைத்துக்கொள்வோம். மிதுனத்தின் 7ஆம் வீடு தனுசு ஆகும். தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். எனவே மிதுனத்தின் பாதகாதிபதி குரு ஆவார்.

மிதுன ராசியின் பாதகாதிபதி குரு ஆவார்.
கன்னி ராசியின் பாதகாதிபதி குரு ஆவார்.
தனுசு ராசியின் பாதகாதிபதி புதன் ஆவார்.
மீனம் ராசியின் பாதகாதிபதி புதன் ஆவார்.

அனைத்து ராசிகளுக்கும் 2,7ஆம் வீட்டின் அதிபதிகள் மாரகாதிபதி ஆவார்கள்.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்