உணவு பொருட்கள் கனவு பலன்கள் – Food Kanavu Palangal in Tamil – அனைவருக்கும் வணக்கம், மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என அனைவரும் அறிந்ததே. அவ்வாறு இருக்க, கனவில் உணவு பொருட்களை கண்டால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்வோம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

உணவு பொருட்கள் கனவு பலன்கள்
விருந்தில் உணவு உண்பது போல் கனவு கண்டால், திருமண தடை நீங்கும், உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும் என்று அர்த்தம்.
காப்பி சாப்பிடுவது போல கனவு கண்டால், சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், பொருள் வரவு உண்டாகும் என்று பொருள்.
மாமிச உணவு சாப்பிடுவது போல கனவு வந்தால், நல்ல செய்தி வரும் என்று பொருள். அதுவே முட்டை அல்லது மீன் சாப்பிடுவது போல வந்தால் வியாதிகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. கவனம் தேவை.
மீன் இறந்து கிடப்பது போல, மற்றும் கருவாடு கனவில் வந்தால் பகைவர்களின் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
ஜாம் அல்லது சாஸ் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற போவதற்கான அறிகுறியாகும்.
சாப்பாடு, சாப்பிடுவது போல கனவில் வந்தால், வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருள்.
அரிசி கனவில் வந்தால், நாம் செய்யும் தொழில் மேன்மை அடையும், லாபம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
காரமாக சாப்பிடுவது போல கனவு கண்டால், உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அல்லது சன்மானம் கிடைக்கும் என்று அர்த்தம்.
கோழி முட்டை கனவில் வந்தால் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று பொருள்.
டீ குடிப்பது போல கனவு கண்டால், பிரிந்து போன நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள் என்று அர்த்தம்.
கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால், செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால், வறுமை உண்டாகும் என்று அர்த்தம்.
சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால், மனதில் நினைத்து கொண்டிருக்கும், வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.
வெல்லம் தின்பது போல கனவு கண்டால், வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போலக் கனவு கண்டால், நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று அர்த்தம்.
பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால், நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
பால் குடிப்பது போல கனவு கண்டால், செல்வம் சேரும் என்று அர்த்தம்.
தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால், வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
பருப்பு கனவில் வந்தால், பகைவர்கள் விலகி விடுவார்கள் என்று பொருள்.
உப்பு கனவில் வந்தால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று பொருள்.
பட்டாணி கனவில் வந்தால், வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.
பசியால் வருந்துவது போல கனவு கண்டால், வறுமை ஏற்படலாம், செல்வங்கள் கூட கரையலாம் என்று அர்த்தம்.
தனியாக சாப்பிடுவது போல் கனவு வந்தால், துன்பங்கள் ஏற்படும். உறவினர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தில் சாப்பிடுவது போலக் கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.
ரொட்டி சாப்பிடுவது போல கனவு வந்தால், வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
இஞ்சி சாப்பிடுவது போல கனவில் கண்டால், நோய்களினால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள்.
இனிப்புகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று அர்த்தம்.
ஏலக்காய் கனவில் வந்தால், பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள் என்று அர்த்தம்.
ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால், மிகுந்த செல்வம் வரப்போவதன் அறிகுறியாகும்.
Read More
Video – உணவு பொருட்களை கனவில் கண்டால் என்ன பலன்
- வீடு கனவு பலன்கள்
- யானை கனவு பலன்கள்
- மற்ற கனவு பலன்கள்
- ஜோதிடம் தொடர்பான பதிவுகள்
- All Kanavu Palangal in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்